- Ads -
Home Reporters Diary தங்கர்பச்சான் ஜெயிப்பார்னு சொன்ன கிளி விடுதலை; ஜோசியருக்கு சிறை! பாமக., கண்டனம்!

தங்கர்பச்சான் ஜெயிப்பார்னு சொன்ன கிளி விடுதலை; ஜோசியருக்கு சிறை! பாமக., கண்டனம்!

கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டார். கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

#image_title
pmk thangar pachan kili josytam

கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டார். கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடலூர் தென்னம்பாக்கம் பகுதியில், 2 நாட்களுக்கு முன் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, தங்கர் பச்சான் கிளி ஜோசியம் பார்த்தார். கிளி ஜோசியத்தில், அழகுமுத்து ஐயனார் படம் வந்ததால், வெற்றி பெறுவீர்கள் என கூறினார் கிளி ஜோசியக்காரர்.

தங்கர் பச்சான் கிளி ஜோசியம் பார்த்த வீடியோ வைரலான நிலையில், தே.ஜ.கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று ஜோசியம் சொன்ன கிளி ஜோசியரை கைது செய்துள்ளது வனத்துறை. கிளியை கூண்டில் அடைத்து வைத்து ஜோசியம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என்று, வனத்துறை விளக்கம் கொடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் சமூகத் தளங்களில் பெரும் கேலிப் பொருள் ஆகியது. பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் (தங்கர்பச்சான்) வெற்றி பெறுவார்னு வாயால சீட்டு எடுத்துக் கொடுத்து ஜோசியம் சொன்னதுக்கே, அதுவரை கூண்டுக்குள் சிறைப்பட்டிருந்த கிளி விட்டு விடுதலையாகி சிட்டாப் பறந்துடுச்சி!சிறைக்குள் அடைத்து வைத்திருந்த சோசியக்காரர் இப்போ சிறைப்பட்டுவிட்டார்..!

அதுபோல், உங்கள் தொகுதியில் நிற்கும் தே.ஜ.கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்று விடுவார் என்று நீங்களும் உங்க வாக்குச் சீட்டை எடுத்துக் கொடுத்து சொல்லிவிட்டால் போதும், பிறகு பாருங்கள், சர்வாதிகாரத்துல திராவிடச் சிறையில் அடைப்பட்டிருக்கிற தமிழகமே விட்டு விடுதலையாகி சுதந்திரமா பறக்க ஆரமிச்சிடும்! அதை சிறைப்படுத்தி வைத்திருந்தவனுங்கள்லாம் இனி சிறைக்குள் போயிடுவாங்க…! – என்று பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  திராவிட மாடல் ஆட்சியில் தலைவிரித்தாடும் தீண்டாமைக் கொடுமை! பள்ளிச் சுவரில் மனிதக் கழிவு!

இந்நிலையில், கடலூர் தொகுதியில் தங்கர்பச்சான் வெற்றி என்று சோதிடம் கூறியதால் கிளி சோதிடர் கைது: முட்டாள் திமுக அரசின் பழிவாங்கும் போக்குக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்! என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்ட கண்டன அறிக்கை:

கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் அருகில் கிளி சோதிடம் பார்த்து வந்த செல்வராஜ் என்பவரை தமிழக அரசின் வனத்துறை கைது செய்திருக்கிறது. கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் இயக்குனர் தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளிசோதிடம் பார்த்து கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. பாசிசத்தின் உச்சமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளி சோதிடர் கூறியதையே தாங்கிக் கொள்ள முடியாத திமுக அரசு, தேர்தல் முடிவு அப்படியே அமைவதை எப்படி தாங்கிக் கொள்ளும்? சோதிடம் கூறியதற்காக கிளி சோதிடரை கைது செய்த திமுக அரசு, தங்கர்பச்சானுக்கு வாக்களித்ததற்காக கடலூர் தொகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை கைது செய்வார்களா? இந்த நடவடிக்கை மூலம் திமுகவின் தோல்வி பயம் அப்பட்டமாக தெரிகிறது. பகுத்தறிவு கட்சி என்று கூறிக்கொள்ளும் திமுகவால் சோதிடத்தில் நல்ல செய்தி கூறியதைக் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் அக்கட்சி எந்த அளவுக்கு முட்டாள் தனத்திலும், மூட நம்பிக்கையிலும் ஊறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

ALSO READ:  3 லட்சம் குடும்பங்கள் அவதி; ரேஷன் அட்டை உடனே வழங்குக: பாமக., ராமதாஸ்!

கிளியை கூண்டில் அடைத்தது குற்றம் என்றும், அதற்காகத் தான் சோதிடர் செல்வராஜ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளி சோதிடர்கள் கிளிகளை கூண்டில் வைத்து தான் சோதிடம் பார்க்கிறார்கள். இப்போது கைது செய்யப்பட்ட சோதிடர் அதே இடத்தில் பல ஆண்டுகளாக சோதிடம் பார்த்து வருகிறார். அப்போதெல்லாம் அவர் கைது செய்யப்படவில்லை. மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவாரா? என்று அவரது துணைவியார் நூற்றுக்கணக்கான சோதிடர்களிடம் கிளி சோதிடம் பார்த்திருப்பார். அந்த கிளி சோதிடர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், இப்போது தங்கர்பச்சானுக்கு சோதிடம் கூறிய பிறகு சோதிடர் கைது செய்யப்படுகிறார் என்றால் அதற்கான காரணத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டின் காடுகளில் லட்சக்கணக்கான மரங்களும், ஆயிரக்கணக்கான விலங்குகளும் அழிக்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, ஓர் ஏழை கிளி சோதிடரை கைது செய்து அதன் வீரத்தைக் காட்டியிருக்கிறது. அந்த சோதிடரின் பிழைப்பில் மண்ணைப் போட்டிருக்கிறது. இதற்குக் காரணமானவர்களுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

ALSO READ:  ஆவரம்பாளையம் சர்வோதய சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா!
தினசரி செய்திகள்
Dhinasari Tamil News Web Portal Admin

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version