புதுக்கோட்டையில் தே.மு.தி.க.,சார்பில் நடந்த பக்ரீத் விழாவில் கலந்துகொண்டு தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த் நிருபர்களிடம் கூறும்போது, காவிரி, முல்லை பெரியார் நதி நீர் பிரச்னையில் இரு மாநில அரசுகளும் நாடகமாடி வருகின்றன. இந்த பிரச்சனையில் முதல்வர் உட்கார்ந்து கொண்டு பிரதமருக்கு கடிதம் எழுதுவதை விட, பிரச்னையை தீர்க்க பிரதமரை நேரில் சந்தித்து பேசி தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழகத்தில் மின்வெட்டு இருந்து வருகிறது. இந்த விழாவில் கூட 1 மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. ஏன், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது கூட மின்வெட்டு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு மாநில அரசின் அமைச்சரவை கூட்டத்தை கூட்டி தீர்மானிக்க வேண்டும். டி.எஸ்.பி., விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற மத்திய அரசுதான் வழி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.