மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி இருந்த இடத்தில், நரபலி நடந்ததாக கூறப்பட்டு, விசாரணை நடத்தியதில், எலும்பு கூடுகள் கிடைத்திருக்கின்றன. இது, அச்சத்தை வர வழைத்துள்ளது. டி.எஸ்.பி., விஷ்ணுபிரியாவின் மரண பின்னணியில், உயர் அதிகாரிகளின் மிரட்டல் இருந்துள்ளது தெரிகிறது.
முத்துக் குமாரசாமியை தொடர்ந்து, தற்போது, பல லட்சம் கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும், ‘கிரானைட்’ முறைகேடு குறித்து, விசாரணை செய்து வரும் சகாயத்திற்கும், காவல் துறையினர் போதிய ஒத்துழைப்பு தரவில்லை. அவருக்கு, தொடர் மிரட்டல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த விவகாரங்களில், உண்மைகளை வெளிக்கொணர, அரசு நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.