தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்தடை நிலவிவரும் நிலையில், தமிழகம் மி்ன்மிகை மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் சட்டசபையில் கூறியுள்ளார்.
உண்மைக்கு மாறான தகவலை சட்டசபையில் தெரிவிக்கலாமா என்று திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பி உள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, தமிழக சட்டசபையில் மாநிலம், மின்மிகை மாநிலமாக உள்ளதாக, மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியிருக்கும் நிலையில், பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
சென்னையைத்தவிர மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு 2 மணிநேர மின்தடைக்கு வாய்மொழி உத்தரவு தமிழகஅரசு பிறப்பித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.