சென்னை: ஊடக உலகில் பெண் விடுதலை என்றும் பெண்ணியம் குறித்தும் பேசும் சிலர், பெண்களிடம் தரக்குறைவாக நடந்து கொள்ளும் பிரச்னைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்!
சென்னையில் பேராசிரியை ஒருவருக்கு தொந்தரவு கொடுத்த புகாரில் 2 செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், தி.மு.க.வைச் சேர்ந்த மீம்ஸ் புகழ் தமிழன் பிரசன்னா கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்து பெரிய விவகாரம் ஆகியுள்ளது.
புகார் கொடுத்துள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரி பேராசிரியை, விகடன் நிறுவனத்தில் பணிபுரியும் செய்தியாளர் ஜோ.ஸ்டாலினுடன் நட்புடன் பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சில பிரச்னைகளால் நட்பை துண்டித்துள்ளார்
இதனை அடுத்து, நாளிதழ் நிருபர் ஒருவர் பேஸ்புக் மூலம் அந்த பேராசிரியைக்கு பழக்கமாகியுள்ளார். மேலும் அந்த பேராசிரியை உடன் பழகி வந்துள்ளார். ஒருமுறை பேராசிரியை வீட்டுக்கே சென்று விட்டதால், நாளிதழ் நிருபருடன் பேசுவதை பேராசிரியை நிறுத்திக் கொண்டுள்ளார். இந்த நிலையில் நாளிதழ் நிருபருடன் பேராசிரியைக்கு நேர்ந்த சம்பவங்கள் எல்லாம் ஏற்கனவே அறிமுகமாகி பின்னர் நட்பு துண்டிக்கப்பட்ட மற்றொரு நிருபருக்கு தெரியவந்துள்ளது.
முதலில் பழகிய நிருபர், அந்த பெண்ணுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், பழகியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிடப் போவதாகவும் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். இதனால் பேராசிரியை, சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் இரண்டு நிருபர்களுக்கும் எதிராக புகார் கொடுத்துள்ளார்.
இந்தப் புகார் தொடர்பாக நிருபர்களை விசாரணைக்கு அழைத்துள்ளார் திருமங்கலம் காவல் ஆய்வாளர். ஆனால் இருவரும் விசாரணைக்கு வரவில்லை. மாறாக தி.மு.க செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு காவல் ஆய்வாளருக்கு வந்திருக்கிறது.
அப்போது ஆய்வாளரிடம் பேசிய தமிழன் பிரசன்னா, சார்… இது குடும்ப பிரச்சனை, நாளிதழ் நிருபருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. மேலும் ஒரு பெண்ணின் வாழ்க்கை வேறு சம்பந்தப்பட்டுள்ளது. எதுவாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம், நிருபருக்கு மேலிடத் தொடர்புகள் இருக்கிறது, வி.ஐ.பிக்கள் பலருக்கு நெருக்கமானவர்கள், எனவே வழக்குப் பதிவு செய்யாதீர்கள் என்று மிரட்டலாக பேசிய தமிழன் பிரசன்னா தான் அறிவாலய வழக்கறிஞர் பேசுகிறேன் எனவும், அதிகாரத் தோரணையில் பேசியிருக்கிறார். அது மட்டுமின்றி, திமுகவின் பெயரையும் ஆய்வாளருக்கு நெருக்கடி கொடுத்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து அந்த ஆய்வாளர் சற்று பின்வாங்கி இருந்திருக்கிறார்.
ஆனால் பேராசிரியையின் சகோதரரோ ஊடக தொடர்பு உள்ள நபராக இருந்ததால், விடாமல் இந்த வழக்கை முன்னெடுத்து சென்றிருக்கிறார். இதனால் அவர் தனது ஊடக நண்பர்கள் மூலமாக திருமங்கலம் ஆய்வாளரிடம் பேச வேறு வழியில்லாமல் நிரூபர்களுக்கு எதிராக வழக்குப் பதியப்பட்டு இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் விவகாரம் என்னவென்றால், தமிழன் பிரசன்னா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக பேசியது!
இப்போது தமிழன் பிரசன்னா காவல் நிலையத்துக்கு போன் செய்து மிரட்டும் ஆடியோ பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அந்த ஆடியோ பதிவு ….