― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

HomeReporters Diaryஇந்த நான்கரை ஆண்டுகளில்.. அப்படி என்னதான் செய்தார் மோடி..?!

இந்த நான்கரை ஆண்டுகளில்.. அப்படி என்னதான் செய்தார் மோடி..?!

- Advertisement -

modi 1

இந்த நான்கரை ஆண்டுகளில்.. அப்படி என்னதான் செய்தார் பிரதமர் மோடி..?!

பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் இந்திய அரசின் அதிகாரங்களை எல்லாம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.

அமைச்சர்கள் அனைவரையும் தனது கண்காணிப்பிலேயே வைத்துக்கொண்டார்.

திறமையான அதிகாரிகளைத் தேடித்தேடி முக்கிய இடங்களில் அமர்த்தினார்.

அமைச்சர்களையும், அதிகாரிகளையும் வெரட்டி வெரட்டி வேலை வாங்கினார்.

தான் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்குவதில்லை, ஊழலில் ஈடுபடுவதில்லை என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் ஆகியோரையும் லஞ்ச, ஊழலில் இருந்து விலகியிருக்கச் செய்தார்.

காலங்காலமாக காங்கிரஸ், திமுக போன்ற சுரண்டல் அரசியல் கட்சிகள், பெருமுதலாளிகள் உள்ளிட்டோர் கொள்ளையடித்து வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருந்தக் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவருவதற்கு உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இயங்கக்கூடிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்தார்.

லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டினாலும் வரி கட்டாமல் ஏய்த்துக்கொண்டிருந்தவர்களைப் பார்த்து வரி கட்டிவிடுமாறு தொடர் கோரிக்கைகள் விடுத்தார்; வரி கட்டுவதற்குப் பல சலுகைகளும் அளித்தார்.

ஆனாலும் அசையாத வரி ஏய்ப்பாளர்களுக்குப் பழைய பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்! மறைத்து வைக்கப் பட்டிருந்தப் பணமெல்லாம் வங்கிக் கணக்குக்குள் வந்தது. வரியை ஏய்த்தவர் களிடமெல்லாம் அபராதத்துடன்கூடிய வரி வாங்கினார்.

மிகப்பெரிய நாடான நம் நாட்டில் கோடிக்கணக்கானப் பேர் தொழில் செய்கிறார்கள். மிகவும் சிக்கலான வரி முறை இருந்தது. அதனைப் பயன்படுத்திக்கொண்டு பல தொழிலதிபர்களும் வியாபாரிகளும் அரசாங்கத்துக்குக் கட்ட வேண்டிய வரியை ஏய்த்துக்கொண்டிருந்தனர். கள்ளத்தனமாக வர்த்தகம் நடத்தினார்கள். இதனால் அரசின் வரி வருவாய்க் குறைந்ததோடு ஏழை-எளிய, நடுத்தர வர்க்கத்து நுகர்வோரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். விலைவாசியும் எகிறிக்கொண்டே போனது.

இவை எல்லாவற்றிற்கும் முடிவு கட்டும் வகையில் GSTயைக் கொண்டு வந்தார். சிக்கலான வரிமுறை எளிமையானது. வர்த்தகம் செய்பவர்கள் வரி ஏய்ப்பது நிறுத்தப்பட்டது. அரசின் வரி வருவாய்க் கூடியது. சாமானியர்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலை பெருமளவில் குறைந்தது.

கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க லட்சக்கணக்கில் போலி கம்பெனிகளை நடத்திவந்தார்கள். அவற்றின்மூலம் பல லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. அப்படிப்பட்ட சுமார் மூன்றரை லட்சம் போலி கம்பெனிகளைக் கண்டறிந்து ஒழித்தார்.

1500க்கும் மேற்பட்ட காலத்திற்கு ஒவ்வாத சட்டங்களை நீக்கினார்.

டிஜிட்டல் நடைமுறையை ஊக்குவித்தார். முடிந்தவரை எங்கெங்கெல்லாம் இயலுமோ அங்கங்கெல்லாம் தொழில்நுட்பங்களை உட்புகுத்தினார். இச்செயலானது நிர்வாகத்தை சீர்படுத்தியது; தவறுகளை சரிசெய்தது; முறைகேடுகளைப் பெருமளவில் தடுத்தது.

தொண்டு நிறுவனங்கள் என்னும் பேரில் வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு நம் நாட்டில் மதமாற்றக் கொடுஞ்செயலிலும் வளர்ச்சித் திட்டங்களைத் தடுப்பதிலும் ஈடுபட்டு வந்தக் கிட்டதட்ட 5000 NGOக்களை முடக்கினார்.

பாகிஸ்தானிய, இஸ்லாமியத் தீவிரவாதத்தை 99% தடுத்தார். உலக நாடுகளுக்கெல்லாம் பயந்து கிடக்காமல், பாகிஸ்தான் எல்லைக்குள்ளே சென்று தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றுகுவிக்க ஆண்மையுடன் உத்தரவிட்டார்.

நக்ஸல் பயங்கரவாதத்தைப் பெருமளவில் கட்டுப்படுத்தினார். Urban Naxalகளை சட்டத்தின் துணை கொண்டு கைது செய்தார்.

காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது 10,000 கோடி, 15,000 கோடி என வங்கிகளில் கடன் வாங்கிவிட்டுத் திருப்பித் தராமல் ஜாலியாக நம் நாட்டிலேயே சுற்றிக் கொண்டிருந்த வர்களெல்லாம் குலை நடுங்கி வெளிநாடு ஓடச் செய்தார். அவர்களின் சொத்துக்களை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். வெளிநாடுகளிலிருந்து அவர்களைக் கைது செய்து இந்தியா கொண்டுவரத் தீவிர முயற்சிகள் மேற்கொண்டார்.

இப்படி எல்லா வகையிலும் தீயவர்களை அடக்கி ஒடுக்கி, நிர்வாகத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து, நேர்மையாகவும் திறமையாகவும் மிகக் கடுமையாக உழைத்து, நாட்டின் வருமானத்தைப் பெருக்கினார்.

அதனால்தான் அவரால் கழிவறை இல்லாத ஒவ்வொரு வீட்டுக்கும் கழிவறைக் கட்ட ரூ. 12,000 கொடுக்க முடிந்தது.

வீடு கட்டும் ஒவ்வொரு ஏழைக்கும் ரூ.2 லட்சத்து 50,000 கொடுக்க முடிந்தது.

வருடத்திற்கு 12 ரூபாய் பிரிமியத்தில் ரூ.2 லட்சம் விபத்துக் காப்பீடு கொடுக்க முடிந்தது.

வருடத்திற்கு 330 ரூபாய் பிரிமியத்தில் ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீடு கொடுக்க முடிந்தது.

ஒரு ரூபாய் கட்டணம் வாங்காமல் வருடத்திற்கு 5 லட்ச ரூபாய் அளவிலான மருத்துவக் காப்பீடு 10 கோடி குடும்பங்களுக்குக் கொடுக்க முடிந்தது. (இதனால் 50 கோடி பேர் பயனடைவர்)

8 கோடி பேருக்கு இலவச சமையல் கேஸ் இணைப்புக் கொடுக்க முடிந்தது.

SC/ST மக்கள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட 12 கோடிக்கும் மேலானோர் தொழில் தொடங்க மிகவும் எளிதாகக் கடன் வழங்க முடிந்தது.

அதனால்தான் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் வரி கட்டத் தேவையில்லை என்னும் மிகவும் மகிழ்ச்சிகரமான முடிவை அவரால் அறிவிக்க முடிந்தது.

விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை-எளிய, நடுத்தர வர்க்க மக்கள் அனைவருக்குமானப் பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டுவர முடிந்தது.

இப்படிப்பட்ட உத்தமத் தலைவரை, உன்னத சேவகரை ஐ.நா. சபை பாராட்டி விருது கொடுக்கிறது; கொரியா விருது வழங்கிக் கௌரவிக்கிறது; அமெரிக்கா பாராட்டுகிறது; சிங்கப்பூர் பாராட்டுகிறது; ஒபாமா பாராட்டுகிறார்; ரஷ்ய அதிபர் புதின் பாராட்டுகிறார்; இன்னும் பல உலகத் தலைவர்கள் பாராட்டுகிறார்கள்…

ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல், தலைவலி – காய்ச்சல் என்று ஓய்வெடுக்காமல், தனது சந்தோஷத்துக்கெனப் பொழுதுபோக்கு எதிலும் ஈடுபடாமல், சுயநலமென்பது சிறிதுமின்றி, இந்த இந்தியத் திருநாட்டை எப்படியாவது வல்லரசு ஆக்கிவிட வேண்டுமென ஓடிஓடி உழைக்கும் நரேந்திர மோடி!

– கார்த்திகேயன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version