23/09/2019 1:41 PM

கணவனை புதைத்த இடத்தில் தீக்குளித்து உயிரை விட்ட மனைவி்; அனாதைகளான  குழந்தைகள்…!

காதல் கணவன் இறந்த துக்கம் தாளாமல் சுடுகாட்டில் தீக்குளித்து இறந்த மனைவி; தாய், தந்தையை இழந்து தவிக்கும் மூன்று குழந்தைகள்.நெஞ்சை உருக்கும் சம்பவம்…!

திருச்சி மாவட்டம் சனமங்கலம் என்ற ஊரில் வசித்து வருபவா் பிரியா இவருக்கும் எம்ஆர்.பாளையத்தை சேர்ந்த முத்துச்செல்வன் என்பரும் கடந்த 7ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளனா்.

பின்னா் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனா். பிரியா,முத்துச்செல்வன் தம்பதியினருக்கும் செந்தமிழ்செல்வன், ஆனந்தசெல்வன், வெற்றிச்செல்வன் ஆகிய மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனா்.

சிறுகுடும்பமாக சந்தோசமாக வாழ்ந்து வந்த இந்த தம்பதியினா்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு முத்துச்செல்வன் ட்ராகட்ர் ஒன்றில் தன் நண்பர்கள் மூவருடன் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலியே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனால் கணவர் இறந்த துக்கம் தாளாது பிரியா மிகவும் விரக்தி அடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.

இதனையடுத்து கணவர் இறந்த பின்பு அவர் எம்.ஆர்.பாளையத்தில் உள்ள அவரது மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று பிரியா தன் கணவரை அடக்கம் செய்த மயானத்திற்கு தனியாக சென்று அவரது கணவர் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் நின்று கதறி அழுதுள்ளார்.

பின்னர் ஏற்கனவே தன் கையில் கொண்டு வந்த மண்ணெண்ணையை தன் உடல் மீது ஊற்றி கொண்டு தீ பற்ற வைத்து அலறி துடித்தபடி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் பிரியாவின் உடலைக் கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அதனைதொடா்ந்து பிரியா இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

விசாரணையில் பிரியா இறப்பதற்கு முன் அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றையும் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஏற்கனவே தந்தையை இழந்த துக்கத்திலிருந்த மூன்று சிறுவா்களும் தற்போது தாயையும் இழந்து நிர்கதியாக விடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.Recent Articles

வெள்ளத்தில் டிக்டாக்; இளைஞருக்கு நேர்ந்த கதி.!

#தேசிய பேரிடர் மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு படையினர் 48 மணி நேரம் தேடி இன்று காலை சடலமாக தினேஷ் மீட்கப்பட்டார்.#

டிரம்புக்கு… தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாரா மோடி..?

ஹூஸ்டனில் நேற்று பாரதப் பிரதமர் மோடி ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய மோடி, தனது நண்பர் என்று கூறி டிரம்ப்பை அறிமுகப் படுத்திவைத்தார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் தொழிற்பயிற்சி அளிக்கப்படும்! செங்கோட்டையன்!

பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. மாணவா்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தமிழக அரசு புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு ! வாபஸ் பெற தமிழிசை முடிவு?

தெலுங்கானாவின் ஆளுநராக பதவி ஏற்ற நிலையில் வழக்கை தொடர விரும்பவில்லை என்று தமிழசை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தைக்கு விபத்து! அறிவித்த வாட்ச்! உயிர் மீட்ட போலீஸ்!

அவர் கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் சேதமடைந்த நிலையில் விபத்து நடந்து இருப்பதை உறுதிசெய்து நடந்த இடத்தையும், நபர் சுயநினைவை இழந்து கிடப்பதாகவும் குறுஞ்செய்தியை அவரது மகன் மற்றும் அவசர சேவை மருத்துவமனைக்கு மற்றும் அவசர அழைப்புக்காக கொடுக்கப்பட்ட எண் இரண்டிற்கும் குறுஞ்செய்திஅனுப்பியுள்ளது.

Related Stories