
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷpல்பா பிரபாகர் சதீஸ் ஆணைப்படியும், மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்பேரில் செங்கோட்டை வட்டார வளமையம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் சார்பில் (2019-2020) (0முதல் 18வயது வரை) மாற்றுதிறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.
முகாமிற்கு தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் சீனிவாசன் தலைமைதாங்கினார்.
வட்டார கல்வி அலுவலர்கள் மேரிகிரேஸ்ஜெபராணி, ஆனந்தவேல் எஸ்எம்எஸ்எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பீட்டர்ஜெகதீஸ்போஸ் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
நல்நூலகர் இராமசாமி, மேலச்செங்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் சாஸ்த்திரி, வாசகர் வட்ட இணைச்செயலாளர் நல்லாசிரியர் செண்பகக்குற்றாலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அதனைதொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் சீனிவாசன் முகாமை தொடங்கி வைத்து மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு தேசிய மாற்றுதிறனாளிகள் அடையாள அட்டைகளை வழங்கினார்.
முகாமில் தென்காசி அரசு மாவட்ட மருத்துவமனை கண் சிறப்பு மருத்துவர் இராஜலட்சுமி, காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் மணிமாலா, ஆறுமுகம், சுந்தரராஜன், எலும்பு முறிவு சிறப்பு மருத்துவர் மது, மனநல சிறப்பு மருத்துவர் நிர்மல், கண் பரிசோதனை தொழில்நுட்ப பணியாளர் இராமசுப்பிரமணியன், பேச்சு, மற்றும் கேட்டல் திறன் பரிசோதகர் ரெக்ஸ் இயன் முறை மருத்தவர் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுதிறன் குழந்தைகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.

மேலும் முகாமில் மாற்றுதிறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், செவித்துணைக்கருவி, செயற்கை கை, கால், காலிபர் மற்றும் கண்கண்ணாடி போன்ற உபகரணங்கள் வழங்குதல், அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தல் அரசு சிறப்பு திட்டங்கள் பெற வழிவகை செய்தல் உள்ளிட்ட பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடந்தது.
முகாமில் செங்கோட்டை, கடையநல்லூர் தாலூகா பகுதிகளை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாற்றுதிறன் குழந்தைகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரிய பயிற்றுநர் சுகந்தி நன்றி கூறினார்.