
ஆவின் பால் விலை உயர்த்தப்பபட்டதை தொடர்ந்து, ஆவின் பால் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியாளர்களின் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டது. இந்நிலையில், ஆவின் பால் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆவினில் தயாரிக்கப்படும், நெய், பால், பவுடர், பனீர் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி
ஒரு லிட்டர் நெய் – ரூ.30
ஒரு கிலோ பால் பவுடர் – ரூ.50
ஒரு கிலோ பனீர் – ரூ.50
அரைகிலோ வெண்ணெய் -ரூ.10
அரை லிட்டர் ஆவின் டிலைட் – ரூ.4
அரை லிட்டர் நறுமண பால் – ரூ.3
அரை லிட்டர் தயிர் – ரூ.2
உயர்த்தப்பட்டுள்ளது.
விலை உயர்விற்கு பின்னர்
ஒரு லிட்டர் நெய் – ரூ.495
ஒரு லிட்டர் பனீர் – ரூ.450
ஒரு கிலோ பால் பவுடர் – ரூ. 320
ஒரு கிலோ பால்கோவா – ரூ.520
அரை லிட்டர் தயிர் – ரூ.27
அரை கிலோ வெண்ணெய் – ரூ.240
அரை லிட்டர் நறுமண பால் -ரூ.25
ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு வரும் புதன்கிழமை(செப்., 18) முதல் அமலுக்கு வருகிறது.