கோவை காரப்பன் என்கின்ற தீய சக்தியை தமிழக அரசு உடனே கைது செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்... என்று பாஜக.,வைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இவரைப் போல் பாஜக.,வினர் பலரும் கோவை காரப்பன் என்ற நபரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். பேஸ்புக், டிவிட்டர் என சமூக வலைத்தளங்களிலும் இந்தக் கோரிக்கைகள் விடுக்கப் பட்டு வருகின்றன.
கோவை காரப்பன் என்பவர் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, இந்து மதத்தினர் தெய்வமாக வணங்கும் பகவான் கிருஷ்ணனைப் பற்றி கேவலமாகவும், அறுவறுக்கத்தக்க வகையிலும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். மேலும், அத்திவரதர் வைபவம் குறித்தும் மோசமான சொல்லாடல்களால் கோடிக்கணக்கானோரின் நம்பிக்கையை கேலிக்கு உள்ளாக்கியுள்ளார்.
இந்த விடியோ வைரலாகப் பரவியது. இதை அடுத்து, இந்துமுன்னணி அமைப்பினர் கோவை காரப்பனின் கடை முன்னர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, காரப்பனின் கடையில் மான ரோஷமுள்ள இந்துக்கள் பொருள்களை வாங்கக் கூடாது என்று கோரிக்கை வைத்தனர்.
இதை அடுத்து, தாம் பேசியது குறித்து வருத்தம் தெரிவித்து வாட்ஸ் அப் வாயிலாக ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டார் காரப்பன். ஆனால், அதை எவரும் நம்பத் தயாராக இல்லை..
இந்த நிலையில், அவரைக் கைது செய்ய வேண்டும் என்று பாஜக.,வினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவருக்கு பதவி கொடுத்து வைத்திருக்கும் பாஜக.,வே இப்போது கைது செய்யச் சொல்வது வேடிக்கை என்றும், பாஜக.,வுக்கு தில்லு இருக்குமானால், அந்தப் பதவியில் இருந்து காரப்பனை நீக்குவதற்கு முன்வர வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இது குறித்த பழைய செய்தியையும் சமூகத் தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதில்….
கோவை மாவட்டம் சிறுமுகையில் வசித்து வருபவர் காரப்பன். இவர் 1977 பட்டு சேலைகள் உற்பத்தியை தொடங்கி பிறந்த சகோதரர்களையும் பட்டுச் சேலைகளை செய்வதற்கு ஊக்கம் அளித்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டில் கைத்தறி களஞ்சியம் என்ற புத்தகத்தையும் 2012ல் கைத்தறி பெட்டகம் என்ற புத்தகத்தையும் புலவர் முருகேச பாண்டியன் என்பவர் உதவியுடன் எழுதியுள்ளார்.
இந்த புத்தகங்களை மத்திய ஜவுளி ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்துள்ளது இதேபோல் காரப்பனின் கண்டுபிடிப்பான புதிய கைத்தறி இயந்திரங்களை மத்திய அரசின் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்துள்ளனர். இதன் பின்னர் காரப்பனுக்கு மத்திய அரசின் ஜவுளி மற்றும் கைத்தறி சேவை மையம் கைத்தறி ஆலோசனை குழு உறுப்பினராகவும் நெசவாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் தலைமை பயிற்சியாளராக மத்திய அரசு நியமித்துள்ளது. இதற்கான உத்தரவை ஜவுளித் துறையின் துணை இயக்குனர் வாசு வழங்கி உள்ளார்.. – என்ற கடந்த வருடச் செய்தியைப் பகிர்ந்து கொண்டு, பாஜக.,வினரை கிண்டல் செய்து வருகின்றனர்.
பரமாத்மா கண்ணனை இழிவு படுத்தி பேசிய கோவை மாவட்டம் சிறுமுகையை சார்ந்த காரப்பனுக்கு மத்திய ஜவுளி துறையில் உறுப்பினர் பதவி…..
ஹிந்து அமைப்புக்கள் இந்த நாயை கைது செய்ய போராட்டம் நடத்துகிறது…..
ஹிந்துக்களை காக்க வேண்டியவர்களோ இந்த நாயை காத்துக் கொண்டிருக்கின்றனர்..
என்ன அநியாயம்……
மத்திய அரசே இவனுக்கு கொடுக்கப்பட்ட பதவியை உடனடியாக திரும்பப் பெறு…. போராடத்தூண்டாதே……
குறிப்பு:
இந்த காரப்பன் என்பவன் தி.க வைச்சார்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது….
– பி. சரவண கார்த்திக் ( பஜ்ரங்தள் மாநில அமைப்பாளர் – தென் தமிழகம் )