
பெங்களூருவில் இரு இளைஞர்களைக் காதலித்த திருநங்கை ஒருவர் தனது முதல் காதலனைக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
பெங்களுரை சேர்ந்தவர் ரோஸி என்ற திருநங்கை இவருக்கும் அதே பகுதயில் வசித்து வந்த ஆட்டோ டிரைவரான மனோஜ் குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரிடமும் காதல் மலர்ந்துள்ளது.
இருவரும் ஒருவரை ஒருவா் தீவிரமாகக் காதலித்து வந்த நிலையில் மனோஜ்குமார் வேலைக் காரணமாக வெளியூர் சென்றுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையிலான தொடர்பு குறைய ஆரம்பித்துள்ளது.

அப்போது ரோஸிக்கு மற்றொரு பகுதியை சேர்ந்த ஷிவு என்ற இளைஞரோடு காதல் மலர முன்னாள் காதல் மனோஜுடன் பேசுவதைக் குறைத்துள்ளார்.
ஒரு கட்டத்தில் மனோஜ் பெங்களூருக்கே திரும்பி வர ரோஸி வேறொருவரைக் காதலிப்பது மனோஜ்குமாருக்குத் தெரிய வந்துள்ளது.
இதனால் ரோஸிக்கும் மனோஜுக்கும் இடையில் பிரச்சனை வெடித்துள்ளது.
தனது புதிய காதலுக்கு குறுக்கே நிற்கும் பழைய காதலன் மனோஜ் மேல் கோபமான ரோஸி தன் புதிய காதலனான ஷிவுடன் இணைந்து மனோஜ் குமாரைக் கொலை செய்துள்ளார்.
இந்த கொலை பற்றி விசாரணை நடத்திய போலிஸார் காதலர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.