- Ads -
Home அடடே... அப்படியா? மும்பையும் கேரளாவும் மூழ்க போகுதா? திகில் ஆய்வு!

மும்பையும் கேரளாவும் மூழ்க போகுதா? திகில் ஆய்வு!

2050ம் ஆண்டுக்குள் மும்பை மற்றும் கேரளாவின் பெரும்பாலான பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயத்தில் இருப்பதாக அமெரிக்காவில் உள்ள கிளைமேட் சென்ட்ரல் என்ற நிறுவனம் சார்பாக முக்கியமான ஆய்வு கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது

மேலும், வியட்நாம் நாடு முற்றிலுமாக மூழ்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கிளைமேட் சென்ட்ரல் என்ற நிறுவனம் கடல் மட்டம் உயர்வது குறித்து ஆய்வு மேற்கொண்டது.

பொதுவாக இதுபோன்ற ஆய்வுகள் சாட்டிலைட் புகைப்படத்தை கொண்டு தான் நடத்தப்படுகின்றன. ஆனால், இந்த நிறுவனம் ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஒவ்வொரு கடல் பகுதியையும் ஆய்வு செய்தது.

இதன்மூலம், கடல்மட்டம் உயர்வதை துல்லியமாக கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.

கிளைமேட் சென்ட்ரல் நிறுவனம் சார்பாக ஸ்காட் ஏ குல்ப், பெஞ்சமின் ஸ்ட்ராஸ் ஆகியோர் சேர்ந்து இந்த ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளனர். ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஒவ்வொரு கடல் பகுதியையும் இவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

ALSO READ:  Ind Vs Ban Test: சேப்பாக்கத்தில் இந்திய அணி வெற்றி; ஆட்டநாயகன் அஷ்வின்!

மிக துல்லியமாக கடல் மட்டம் உயர்வதை இவர்கள் கணித்த்துள்ளனர். செயற்கைகோள் எங்கே தப்பு செய்கிறது, உண்மையில் கடல் மட்டம் எவ்வளவு வேகமாக உயர்ந்து வருகிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆய்வில் கூறப்பட்டதாவது: உலகில் 15 லட்சம் மக்கள் கடல் மட்டத்தை விட குறைவான உயரத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்கள் வாழும் பகுதி இன்னும் 30 ஆண்டுகளில் மொத்தமாக மூழ்கிவிடும். அதேபோல் தெற்கு வியட்நாம் மொத்தமாக கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதால் அங்குள்ள 2 லட்சம் மக்கள் இடமாறும் சூழ்நிலை உருவாகும். அரபிக்கடல் நினைத்ததைவிட அதிகமாக நிலத்தை ஆக்கிரமித்து வருகிறது.

2050ல் மும்பையின் பெரும்பாலான பகுதிகள் கடலில் மூழ்கி விடும். இன்னும் சில வருடங்களில் இதன் பாதிப்பு தெரிய தொடங்கும். அதேபோல், கேரளா மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகும். இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version