
ஆண்களின் திருமணவயதில் மாற்றம் செய்கிறது மத்திய அரசு ! குழந்தை திருமணத்திலும் முக்கிய மாற்றம்.
டெல்லியில் விரைவில் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் மத்திய அரசு எதுபோன்ற திட்டங்களை முன்வைத்துள்ளது, என்ற தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளது.
மதம்மாற்ற தடை சட்டம் கொண்டுவரப்படுமா? அல்லது பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படுமா என்று பலரும் விவாதம் நடத்தப்பட்டு வரும் வேலையில்.,

பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னோட்டமாக மத்திய அரசு இந்தியர்களின் திருமண வயதில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்துள்ளது.
அதன்படி இந்தியாவில் ஆண்களின் திருமண வயது 21, பெண்களின் திருமண வயது 18 ஆக உள்ளது,
ஆனால் சீக்கியர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் பெரும்பாலும் ஆண்கள் 18 வயதிற்கு முன்பாக திருமணம் செய்துகொள்வதால், பொது சிவில் சட்டம் கொண்டுவந்தால் நடைமுறையில் மாற்றம் வேண்டும் என்பதற்காக அரசு, ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் தற்போது திருமண வயதை அடையாதவர்கள் முன்பே திருமணம் செய்துகொண்டு திருமண வயதை அடைந்தபின்பு சேர்ந்து வாழ்ந்தால் அந்த திருமணம் செல்லும்
ஆனால் அதிலும் மாற்றம் கொண்டுவருகிறது,, இனி திருமண வயதை அடையாமல் நடைபெறும் குழந்தை திருமணங்கள் செல்லாது,
மேலும் குழந்தை திருமணத்தில் ஈடுபடுபவர்களுக்கு இரண்டு மடங்கு அதிகமான தண்டனை வழங்கவும் மத்திய அரசு சட்டம் நிறைவேற்ற இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
இதன்மூலம் மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த இருப்பதை சூசகமாக சொல்லியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலா்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.