
என் தந்தையின் சமாதியை அகற்றி விடுங்கள் இன்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டது பொதுமக்களிடையே ஆச்சரியத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பரபரப்பு தீர்மானம் எடுத்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக் சமாதியை நீக்கி விடும்படி உத்தரவிட்டுள்ளார் அவரது மகன்.
முதல்வரின் முடிவு வெளிவந்த சில மணிகளுக்குள் உத்தரவு வெளிவந்துவிட்டது.
பிஜுபட்நாயக் சமாதியோடு கூட அவருடைய நினைவாக கட்டிய நினைவு மண்டபத்தையும் இடித்து விடும்படி கூறியுள்ளார்.
உலக அளவில் புகழ்பெற்ற பூரி புண்ணிய தலத்தில் பிஜு பட்நாயக் சமாதி உள்ளது. ஸ்வர்கத்வார் என்ற பெயரோடு நினைவு நிலையத்தையும் மயான வளாகத்தையும் அங்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆனால் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மயானத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக உள்ளூர்வாசிகள் கோரி வருகின்றனர்.
பிஜு பட்நாயக் சமாதியும் நினைவு மண்டபமும் அங்கிருப்பதால் அவற்றை இடித்து விரிவுபடுத்துவது சாத்தியமில்லாத செயல் என்றும் இயலாத காரியம் என்றும் அதிகாரிகள் முதல்வருக்கு எடுத்துரைத்தனர்.
அதன் காரணமாக அதிகாரிகளோடு கலந்துரையாடிய முதல்வர் பிரச்சினையின் தீர்வுக்காக எது வேண்டுமானாலும் செய்யத்தானே வேண்டும் என்று முடிவெடுத்தார்.
தந்தையின் சமாதியையும் நினைவு மண்டபத்தை இடித்துவிடும் படி உத்தரவிட்டார்.
முதல்வரின் முடிவு குறித்து மாநில அளவில் மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.