
ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் சாட்டையடி வாங்கி, வினோத நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நித்யசுமங்கலி மாரியம்மன் கோவில் திருவிழா, 10 நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று காலை, பூசாரியிடம் சாட்டையடி வாங்கும் வினோத நிகழ்ச்சி நடந்தது.
சிறுவர் முதல் முதியோர் வரை, தங்கள் வேண்டுதல் நிறைவேறவும், குழந்தை வரம் வேண்டியும், பூசாரி கையில் உள்ள சாட்டையால், மூன்று அடி வாங்கி சென்றனர்
.’அம்மன் சாட்டையால் அடி வாங்கினால், நினைத்தது நிறைவேறும்’ என, பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்
இந்நிகழ்ச்சியில் ராசிபுரம், பட்டணம், புதுப்பட்டி பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதேபோல் ராசிபுரம், கட்டனாச்சம்பட்டி அடுத்த அத்திப்பலகானுார் மாரியம்மன் கோவில் திருவிழாவிலும், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி, ஏராளமான பக்தர்கள், நேர்த்திக்கடனை செலுத்தினர்.