மும்பையில் ரயில்வே தண்டவாளத்தில் நடப்பவர்களை எமதர்மராஜன் வேடத்தில் வருபவர் தூக்கிச் சென்று பாதுகாப்பான இடத்தில் இறக்கிவிட்டார். இதை பார்த்து மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.
மும்பையில் ரயில் தண்டவாளத்தை கடப்பதால் விபத்துகள் ஏற்படுதை தடுக்க மும்பை மேற்கு ரயில்வே காவல்துறை சார்பில் எமதர்மராஜன் வேடத்தில் விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
ஓடும் ரயிலில் ஏறுவது மற்றும் இறங்குவது போன்ற நிகழ்வுகள் மற்றும் தண்டாவளத்தில் அபாயகரமாக நடப்பத போன்ற நிகழ்வுகளால் அதிக அளவு விபத்துக்கள் நடக்கிறது. இந்த சம்பவங்களுக்கு மக்களிடையே உள்ள அலட்சியமே காரணம் ஆகும்.
எவ்வளவு தான் அபராதம் போட்டாலும் மக்கள் இதுவரை தண்டவாளத்தை கடப்பதையோ ஓடும் ரயிலில் இருந்து இறங்குவதையோ நிறுத்துவதில்லை. இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களில் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அளிக்க மும்பை ரயில்வே காவல்துறை முடிவு செய்தது.
இதன்படி மும்பை ரயில் நிலையத்தில் எமதர்மராஜன் வேடமணிந்த ரயில்வே காவலர் ஒருவர, தண்டவாளத்தை கடக்கும் நபரை தடுப்பதும், தண்டவாளத்தில் நடந்துச் செல்லும் நபரை தூக்கிக் கொண்டு காப்பாற்றுவதும் போன்ற விழிப்புணர்வு நடந்தது. இந்த விழிப்புணர்வு அங்கிருந்த மக்களை வெகுவாக கவர்ந்தது. சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
Mumbai: Western Railway, with Railway Protection Force (RPF), is creating an awareness among people about the dangers of trespassing & crossing railway lines. A man costumed as ‘Yamraj’ is providing safety awareness info to people & intervening to stop them from walking on tracks pic.twitter.com/0qnXsUiHHC
— ANI (@ANI) November 8, 2019