
ஒரு மனிதரை கொஞ்சம் பரிதாபத்தோடும் அதே நேரம் நீங்களா இப்படி? நீங்களுமா என கண்ணீரோடும் கேட்க தோன்றுகின்றது
அவர் பெயர் நெல்லை கண்ணன்
குமரி அனந்தனை போல நல்ல பேச்சாளர், கம்பராமாயணத்துக்கு இன்றிருக்கும் ஒரே வாழும் அகராதி அவர். அவரை போல் கம்பனை சுளை சுளையாக தருவார் எவருமில்லை
குறள் அவர் குரலினில் வள்ளுவமாக ஜொலிக்கும். நெல்லை தமிழுக்கு அகத்தியன் பாரதி வரிசையில் வரும் பழம்பெருமை அவர்
அந்த பெரும் தமிழ்பழத்தின் பெரும் பலவீனம் காங்கிரஸ், அதில் சிக்கிவிட்டார். அதாவது சரி ஆனால் காங்கிரஸின் கூட்டணி திமுகவுக்காக அவர் தெருவுக்கு வந்து விசில் அடிப்பதுதான் சோகம்
அன்னார் திருகுறள் சம்பந்தமாக வந்து, இவ்வளவு நாளும் பாஜக எங்கே இருந்தான் அது இது என குதிகின்றார்
அய்யாவுக்கு தெரியாததெல்ல திருவள்ளுவரை பதிப்புகளுக்கு கொண்டுவந்தது சைவ சித்தாந்த தமிழகமும் நெல்லை மண்ணும் என்பது அவருக்கு தெரியாததல்ல
திருகுறள் நெல்லை பக்கம் இந்துக்களால் பிராமணர்களால் போதிக்கபட்டதுமா இவருக்கு தெரியாது
அன்னார் விரக்தியில் பெரியார், அண்ணா, கலைஞர் என பேசிகொண்டிருப்பது மகா சோகம், ஏனய்யா திருகுறளின் ஏகபோக உரிமையினை இந்திய எதிர்ப்பு இந்து எதிர்ப்பு சக்திக்கு கொடுத்தது யார்?
ஒரு பெரியவர், அதுவும் தமிழறிஞர் அவன் இவன் என எல்லோரையும் பேசுவது சரியல்ல
கம்பனை எப்படி எல்லாம் படித்து ராமனை மேடை முழுக்க பேசியவர் இதே கண்ணன்? மதுரை ஆதீனத்தை நித்திசாமி கைபற்ற வந்தபொழுது பொங்கியவர் இதே கண்ணன்
நல்ல ஆன்மீகவாதியாய் இருந்தார் நாம் இதே நெல்லை கண்ணனிடம் கேட்கின்றோம், திருவள்ளுவர் சமணம் என்கின்றீர், உமது நம்பிக்கையாக இருக்கலாம்
அப்படியானால் தமிழர் எல்லாம் சமணர் என்றும் சொல்லாமல் பாஜக எதிர்ப்பு என்ற வகையில் இது தமிழர் நூல் என பிடித்து இந்த நாம் தமிழர் தும்பி போல் “என் அம்மா, என் அப்பா, அடுத்த வீட்டுக்காரன் என பேசுவது சரியா?
நிலை கெட்டுவிட்டார் நெல்லை கண்ணன், அவரின் அக கண்கள் இருண்டுவிட்டன
பாஜக எதிர்ப்பு எனும் ஒற்றை பார்வையில் மனிதர் தரம் தாழ்ந்துவிட்டார், உண்மைகளை மறைக்கின்றார்
வள்ளுவன் சமணமுனியாக இருக்கட்டும் அதையாவது உறுதியாக சொல்லலாம் அல்லவா? அதையும் மறைத்து தமிழர் அடையாளம் என்பது எப்படி சரி?
ஆக இந்துவாக இருக்க கூடாது இருந்தால் தமிழக அடையாளம் அல்ல, சமணமாக இருந்தால் தமிழர் அடையாளம் என்பது எங்கணம் சரியாகும்
இதே நெல்லை கண்ணன் எமக்கு முகநூல் நண்பராக இருந்தார், அது நாம் புலிகளை கண்டித்து காங்கிரஸின் நியாயங்களை சொன்ன காலம், அப்பொழுதெல்லாம் நண்பராய் இருந்தார்
ஒரு இடத்தில் கலைஞர் கருணாநிதி பற்றி எழுதும் பொழுது, பெரியார் பற்றி எழுதும் பொழுது நட்பு பட்டியல் நீக்கம் செய்தார்
காரணம் கேட்டபொழுது தான் ஒரு தூய காங்கிரஸ்காரன், காமராஜரை பழித்த ஒழித்த திமுக எனக்கு விருப்பமானது அல்ல என்றார்
ஏன் அவரின் அரசியல் மேடைகளில் கூட திமுக பற்றி அவர் கிழித்தது கொஞ்சமல்ல
அப்படிபட்ட நெல்லை கண்ணன் இன்று வள்ளுவனுக்காக திமுக பக்கம் சரிவது என்னவகைகோ தெரியவில்லை
நல்ல இலக்கியவாதிகள், விஷயம் அறிந்தவர்கள், திறமைசாலிகள் அரசியலில் சிக்கி திசைமாறுவார்கள்
வம்புரி ஜாண் , வைகோ என ஏகபட்ட வரிசை உண்டு அதி நாஞ்சில் சம்பத்துக்கு அடுத்து சேர்ந்திருபவர் நெல்லை கண்ணன்
குறள் சமண நூல், கிறிஸ்தவ நூல் என்றெல்லாம் சொல்லபடும் பொழுது பொத்தி கொண்டிருந்தவர்
திருகுறளுக்கு பரிமேல் அழகர், மு.வா போன்ற மேதைகள் எழுதிய உரையினை 6ம் வகுப்பு முடிக்கா கருணாநிதி கண்டமேனிக்கு குதறி நாத்திக உரை எழுதும்பொழுது பொத்திகொண்டிருந்தவர்
கலைஞர் தன் இரண்டாம் ஆட்சியில் குறளை ஒழித்துவிட்டு தன் குறளோவிய வசனங்களான “வெள்ளி முளைத்து சனி தொலைந்து” “நாம் என்று சொன்னால்” என்ற சொந்த குரலை தமிழ்நாட்டு மூத்திரசந்தில் எழுதும்பொழுது பொத்திகொண்டிருந்தவர்..
இன்று பாஜ ஒரு இந்து நூல் என்றதும் தன் பரம எதிரி திமுகவுக்கு சாதகமாக தான் ஒரு ஆன்மீக பேச்சாளன் என்பதை மறந்து தன் வேட்டி அவிழ்வது கூட தெரியாமல் களமிறங்குகின்றார் என்றால்..
ச்சீ..சீ..சீ., தமிழும் ஆன்மீகமும் கரைபுரண்டோடும் நெல்லைக்கே அவமானம் இந்த மனிதர்..
- ஸ்டான்லிராஜன்