
போதையில் நாகினி டான்ஸ் ஆடிய மாப்பிள்ளை… திருமணமே வேண்டாம் என்று வெளியேறிய மணப்பெண்…!
வட மாநிலங்களில் திருமணத்தின் போது நாகப்பாம்பை போல நடனம் ஆடுவது வழக்கமாக இருக்கும் நிலையில், போதையில் மாப்பிள்ளை ஆடியதால் திருமணமே நின்று போன சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்திர பிரதேசம் பரேலி பகுதியில் உள்ள லஹிம்புர் கேரி என்ற இடத்தைச் சேர்ந்த டிப்ளமோ படித்த இளம்பெண்ணுக்கும், படிப்பை பாதியில் கைவிட்ட இளைஞர் ஒருவருக்ருக்கும் பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டு திருமணம் ஏற்பாடானது. .
திருமண ஏற்பாடுகள் கடந்த 8-ம் தேதி தடபுடலாக நடந்த நிலையில், திருமண மேடையில் புதுப்பெண் மற்றும் மாப்பிள்ளை இருந்துள்ளனர்.

அப்போது மணமகனின் நண்பர்கள் அவரை நடனம் ஆட அழைத்தனா். இதில் உற்சாகமடைந்த புதுமாப்பிள்ளை போதையில் தள்ளாடிய படி நாகினி நடனம் ஆடி கொண்டிருந்தார்.
இதை கவனித்த மணமகள், அவர் போதையில் இருப்பதை கண்டுபிடித்தார்.
இதனால், ஆத்திரமடைந்த அவர், திருமணம் அன்றும் போதையில் வருவதா? என்று கோபமாக கேட்டு மணமாலையை கழட்டி வீசி, நீ எனக்கு வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த மணமகன், அவரை தாக்க திருமண வீடு ரணகளமானது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட, மணமகள் வீட்டார் கொடுத்த சீர் வரிசை பொருட்களை எடுத்து கொண்டு, பெண்ணை அழைத்து கொண்டு சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.