
உதயநிதி ஸ்டாலின் கட்சியில் பொறுப்புக்கு வந்தது முதல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டா்களிடம் லட்ச கணக்கில் சந்தா தொகை கட்டச் சொல்லி வற்புறுத்துவதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
முரசொலி அறக்கட்டளையின் அனைத்து பொறுப்புகளையும் தன்னுடைய கைக்குள் வைத்திருப்பவர் தான் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி.
அவர் இளைஞரணி பொறுப்பிற்கு வந்ததிலிருந்து முரசொலியில் சந்தாவாக ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகளிடம் 3 மற்றும் 2 லட்சம் என அடிமட்ட தொண்டர்கள் வரை வசூலிக்க ஆரம்பித்து இருக்கின்றாராம்.

முன்பெல்லாம் கட்சி கூட்டம் என்றாலே அன்பகம் அல்லது அறிவாலயத்தில் தான் நடத்தப்படும்.
ஆனால், தற்போது கட்சிக்காரர்களை கசக்கி, பிழிந்து, பணத்தை கறந்து நட்சத்திர ஹோட்டல்களில் தான் கட்சிக் கூட்டங்களை நடத்தி வருகிறாராம் உதயநிதி ஸ்டாலின்.

இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தல் என செலவுகளுக்காக பணத்தை வாரி இறைத்து ஓய்ந்திருக்கும் இந்த நேரத்தில் கட்சிக்காரர்களிடம் மீண்டும் சந்தா கேட்டு நச்சரிக்கிறார்கள்.
இதன் காரணமாக கட்சி நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.
மேலும் உள்ளாட்சி தேர்தல் வருகிறது என்ன செய்யப் போகிறோம் என தலையில் அடித்துக் கொள்கின்றனர்.
உதயநிதி பொறுப்பிற்கு வந்ததிலிருந்து உடன்பிறப்புகள் பெரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.