இட்லி வேணும்…! எனக்கு இட்லி வேண்டும்…! இட்லி மட்டும் தான் வேண்டும்…! ஆரோக்கிய மந்திரம்…! ஆவியில் வேக்காடு…!
அனந்தப்பூர் மாவட்டத்தில் இரு மடங்கு உயர்ந்த இட்லி வியாபாரம்.
” எளிதாக ஜீரணமாகும். சாப்பிடுங்க!” என்று கூறும் மருத்துவர்கள்.
சத்தான உணவு என்று பத்திரம் வழங்கும் நியூட்ரிஷியன்கள்.
ஹோட்டல்களில் பெருமளவு அதிகரித்த விற்பனை!
” தினமும் இட்லி தானா?” என்று சாப்பாட்டு மேஜை அருகில் முகம் சுளித்த டயலாக்கை இதுவரை கேட்டிருக்கிறோம்.
ஹோட்டலுக்குச் சென்றாலும் இட்லியை தவிர வேறே வெரைட்டிக்கே முதலிடம் அளித்ததையும் கண்டிருக்கிறோம்.
பலப்பல காம்பினேஷன்களில் தோசையை சுவைத்து உண்டிருக்கிறோம்.
ஆனால் இந்த மாவட்டத்தில் ஹோட்டலுக்கு வரும் கஸ்டமர்கள் மட்டும் “எங்களுக்கு இட்லி தான் வேண்டும்!” என்று மெனு கார்டை பார்க்காமலேயே ஆர்டர் செய்து இட்லி சாம்பார் சாப்பிட்டு “அப்பாடா …!”என்று மகிழ்ச்சியோடு எழுந்து செல்கிறார்கள்.
பெயர்பெற்ற ஒரு ஹோட்டலில் ஒரு நாளைக்கு 2000 இட்லிகள் விற்பனை ஆனது. இப்போது அந்த எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
திடீரென்று இட்லிக்கு இத்தனை டிமாண்ட் ஏன் என்று கேட்கிறீர்களா?
அனந்தபூர் மாவட்டத்தில் மருத்துவமனைகள் எல்லாம் ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிகிறது.
எளிதாக ஜீரணமாகும் இட்லி சாப்பிடுங்கள் என்று மருத்துவர்கள் நோயாளிகளுக்கு அறிவுரை கூறி வருகிறார்கள்.
சாதாரணமாக காலையோ மாலையோ டிபனாக மட்டுமே இட்லியை உண்பது வழக்கம். இப்போது ஏன் ரிஸ்க் என்று மூன்று வேளையும் இட்லியும் சாம்பாரும் சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக் கொள்கிறார்கள்.
இங்கு மாவட்டம் முழுவதும் இரண்டு மாதங்களாக ஜுரம் தலைவிரித்தாடுகிறது.
ஒரு நாளைக்கு அரசாங்க மருத்துவமனைக்கு 3000 பேர் சிகிச்சைக்கு வருகிறார்கள். அதில் 1000 பேருக்கு மேல் ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.
பலவீனமான அவர்களுக்கு இட்லிதான் சிறந்த உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பதால் வந்த விளைவுதான் இது.
ஒரு வேளைக்கு மூன்று இட்லி தின்றால் போதும். தேவையான சத்தும் போஷாக்கும் உடலுக்கு கிடைத்து விடுகிறது. எண்ணெய் சேர்ப்பது இல்லை . ஆவியில் வேகுவதால் விரைவில் ஜீரணமாகிறது. தானியம் பருப்பு சாம்பார் காம்பினேஷனில் முழுமையான சரிவிகித உணவு கிடைத்து விடுகிறது என்று திருப்தியாக செல்கிறார்கள் நோயாளிகள்.