
எல்லா வயதினருமே சபரிமலை கோயிலுக்கு போங்களேன்..! என்று கெஞ்சுகிறார் தி.க.தலைவர் வீரமணி!
சபரிமலைக்குச் செல்ல முன்பதிவு செய்துள்ள அனைத்து பெண்களையும் சட்டப்படி அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
சபரிமலைக்குச் செல்ல முன்பதிவு செய்துள்ள அனைத்து பெண்களையும் சட்டப்படி அனுமதிக்க வேண்டும் என கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தி.க தலைவர் கி.வீரமணி, அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டில் ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் உயிரிழந்திருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார். இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
சபரிமலை விவகாரத்தில் பெண்களை அனுமதிக்க எந்த தடையும் இல்லாததால், முன்பதிவு செய்துள்ள அனைத்து பெண்களையும் சட்டப்படி அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்க மறுப்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதாகும் என்றும் கி.வீரமணி குறிப்பிட்டார்.