
அப்பாவி மக்களிடம் ஆடம்பர வாழ்க்கை ஆசையைத் தூண்டி தனியார் நிதி நிறுவன வாயில்களில் வட்டிக்கு பணம் வாங்கக் காத்துக் கிடக்கும் பாவப்பட்ட மக்கள்.
கடந்த 2001 ஆம் ஆண்டு கால கட்டத்தில் கிராமப் புறங்களில் மெல்ல காலூன்றிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் மெல்ல மெல்ல தங்கள் சுய விலாசத்தை இழந்து இன்று குடும்பத்தில் கணவனுக்கு கட்டுப்படாத சுதந்திரப் பறவையாக ஆகிவிட்ட குடும்பப் பெண்கள்.
ஒவ்வொரு பெண்ணும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வீட்டில் கடனுக்கு பொருட்கள் வாங்கிப் போட்டு நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் இரவோடு இரவாக வீட்டை காலி செய்து தப்பிச் செல்வது, வீடு தேடி கடன் வசூலிக்க வருபவரிடம் தவணையை திரும்ப செலுத்த முடியாமல் தன்னையே அடமானம் வைப்பது போன்ற நிகழ்வுகளால் மனம் வேதனையடைகிறது.
கடனை திரும்பச் செலுத்த முடியாததால் வீட்டு முன்புற சுவரில் நிதி நிறுவனம் சார்பில் எழுதி வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு விளம்பரம் பார்ப்பதற்கு வேதனையாக உள்ளது.
அப்பாவி மக்களே இருப்பதை வைத்துக் கொண்டு அதற்குள் குடும்பத்தை நடத்தப் பாருங்கள்.
- கே.எஸ்.ராதாகிருஷ்ணன்