
தமிழக திரைப்பட துறையில் அறிமுகமாகி, தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று அரசியலில் நுழைந்தவர், நடிகையும் அரசியல்வாதியுமான ஜெயலலிதா.
இவர் பல்வேறு இன்னல்கள், தடைகளை கடந்து அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக மாறி தமிழகத்தினை பல முறை ஆட்சி செய்த இரும்புபெண்மணி என்ற பெருமை அவருக்கு உண்டு.

இவருக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், முதல்வராக பதவியில் இருந்த பொழுதே சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து பல்வேறு இயக்குனர்களும், ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க முன் வந்தனர்.
தற்போது இயக்குனர் விஜய் எடுத்த ஜெயலலிதாவின் வாழ்க்கை படமானது தலைவி என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஜெயலலிதாவாக பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் நடித்து வருகின்றார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் அண்மையில் வெளியானது.
அந்த டீசரில் அதிமுக ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கை முதல் அரசியல் வாழ்க்கை என அனைத்தும் இடம்பெற்றிருக்கின்றது.
இந்தநிலையில், தங்களிடம் அனுமதி பெறாமல் ஜெயலலிதா வாழ்வை தழுவி படமாக்குவதாக தலைவி படத்திற்கு எதிர்ப்பு, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதி கேட்டு கடந்த நவம்பர் 1 ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை உய்ரநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து,
அதில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படம், திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு தொடர தீபாவுக்கு அனுமதியளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.