
ஒடிசா மாநிலம் ஜகத்பூர் பகுதியை சேர்ந்தவர் பாரிக். இவர் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார்.. அந்த பெண்ணும், பாரிக்கை விரும்பியுள்ளார்.
ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை.. இருவருக்கும் தகராறும், பிரச்சனையுமாகவே இருந்து வந்துள்ளது.
இந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவருமே சில வருஷத்துக்கு முன்பே பிரிந்துவிட்டனர்.
அதனால் பேச்சுவார்த்தையே இல்லாமல் இருந்தது.. இந்த சமயத்தில், திரும்பவும் பாரிக்கை அந்த பெண் தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்துள்ளார்.
ஆனால், பாரிக் இதை தவிர்த்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று சாயங்காலம், கொஞ்ச நேரம் தனியாக பேச வேண்டும் என்று சொல்லி பாரிக்கை அந்த பெண் வந்து சந்தித்துள்ளார்.
அதனால், சலூன் கடை வாசலில் நின்று அந்த பெண்ணுடன் பாரிக் பேசிக் கொண்டிருந்தார்.
அந்த சமயம் பார்த்து தான், மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து பாரிக் மீது வீசினார் அந்த பெண்.
பாரிக்கின் முகம், மார்பு பகுதிகள் எல்லாம் ஆசிட் பட்டு படுகாயம் அடைந்தன… வலியால் பாரிக் கதறி துடிக்கவும், அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்து வந்த போலீஸ், சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்தனர்.
ஒத்து வரவில்லை என்று தெரிந்ததுமே அந்த பெண்ணைவிட்டு பாரிக் பிரிந்துவிட்டார்..
ஆனால், அந்த பெண் தொடர்ந்து பாரிக்குக்கு லவ் டார்ச்சர் தந்து வந்திருக்கிறார்.
. “என்கூட பேசு, என்னை வெளியில கூட்டிட்டு போ” என்று தினமும் தொந்தரவு தந்திருக்கிறார்.
இதை தவிர ஷாப்பிங் கூட்டிட்டுபோய் நிறைய பொருட்களை வாங்கி தருமாறும் பாரிக்கிடம் தொல்லை செய்வாராம்.
இதனால்தான் நேற்று சாயங்காலம் இவர்களுக்குள் வாக்குவாதம் நடந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
எனினும் இது தவிர அவர்களுக்குள் வேறு ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்ற கோணத்தில் தொடர் விசாரணை நடந்து வருகிறது.