
தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.
இதற்காக தேர்தல் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிது.
முன்னதாக உள்ளாட்சி தேர்தலில் சின்னங்களின் பட்டியலில் நோட்டா இருக்காது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்தும், நோட்டா வேண்டியும் தேனி மாவட்டத்தை சேர்ந்த வினோத் என்பவர் உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அதற்கு நீதிமன்றத்தில் பதிலளித்த தேர்தல் ஆணையம், இந்த தேர்தலுக்கான பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில் இப்போது நோட்டா சின்னத்திற்கு வாக்களிக்க ஏற்பாடு செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மறுபக்கத்தில், தேர்தல் வழிமுறைகள் மற்றும் விதிகள் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அதில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
-மாற்றத்திறனாளி வாக்காளர்களும், பிறர் உதவியின்றி நடமாட இயலாத வாக்காளர்களும், கைக்குழந்தையுடன் வரும் பெண் வாக்காளர்களும், வரிசையில் நிற்க வேண்டியதில்லை. முதலில் சென்று வாக்களிக்க அனுமதிக்கலாம்.
-ஆண்கள், பெண்கள் தனித்தனி வரிசையில் நின்று வாக்களிக்க அனுமதிக்கலாம்.
மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் விரும்பும் வரிசையில் நின்று வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.
-வாக்குச்சாவடிக்குள் புகைப்பிடிக்க யாரையும் அனுமதிக்கூடாது.
-வேட்பாளர்களுடன் அவர்களுடைய தேர்தல் முகவர் ஒருவரை மட்டுமே அனுமதிக்கலாம்.
வாக்காளர்களுடன் வரும் குழந்தைகளையும் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கலாம். பிறர் உதவியுடன் நடமாட முடியாத மாற்றுத்திறனாளிகளுடன் அவர்கள் துணையாக ஒருவரை வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கலாம்.
- வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளாதபடி தேர்தல் நடத்துபவர்களை அமர வைக்க வேண்டும்.
- வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் அனுமதித்தால் மட்டுமே போலீஸார் உள்ளே வர வேண்டும்.
-வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் தன்னைத்தானே செல்போன்களை கொண்டு செல்பி, வீடியோ எடுப்பதை தலைமை தேர்தல் அலுவலர்கள் அனுமதிக்கக்கூடாது.
வாக்காளர்கள் இந்த செயல்களில் ஈடுபடுவதை தடுக்க அவர்களை வாக்குச்சாவடிக்குள்ளே வாக்களிக்க அனுமதிக்கும்போது கை கேமரா அல்லது கேமரா வசதியுடன் கூடிய செல்போன் எடுத்து செல்ல அனுமதிக்ககூடாது.
இவ்வாறு அந்த விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.