
நாள்தோறும் தான் செல்லும் சாலைகள் குறித்தும் அதனால் தன்னுடைய மனதில் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வையும் கடிதமாக உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எழுதி அனுப்பியிருக்கிறான் மூன்றாம் வகுப்புப் படிக்கும் மாணவன்.
கேரளாவின் எர்ணாகுளத்துக்கு அருகிலுள்ள பல்லுர்தி – கும்பளாங்கி பகுதியை சேர்ந்த சிறுவன் ஆரவ்
தன்னுடைய வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் செல்லும் வரையிலான வீதியின் நிலையை நீதிபதியின் கவனத்திற்கு கடிதம் மூலமாக கொண்டுவந்திருக்கிறான்.மூன்றாம் வகுப்பு படிக்கும் ஆரவ்,
பல்லுர்தி முதல் கும்பளாங்கி வரை தான் ஆட்டோவில்தான் பள்ளிக்கூடம் சென்று வருவதாகவும் அவன் பயணிக்கும் வீதீயானது படுமோசமான நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
“நிறைய பள்ளங்கள் உள்ள ரோட்டில் ஆட்டோவில் போகவே பயமாக இருக்கிறது.
ஒவ்வொருமுறையும் பள்ளங்களில் ஆட்டோ விழும்போதும் தலைகீழாக கவிழ்ந்து விடுவதுபோல் எனக்கு தோன்றுகிறது.
இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன் ஜட்ஜ் அங்கிள்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சிறுவன் எழுதிய கடிதத்தை அவனது தாயார் நீதிபதிக்கு அனுப்பியிருக்கிறார்.
இக்கடிதம் கிடைத்ததும் நீதிபதியும், ஆரவ்-வின் கடிதத்திற்கு உடனடியக நடவடிக்கையும் எடுத்துள்ளார்
என கேரளத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதிபதியின் கவனத்திற்குச் சென்ற இவ்விவகாரத்தினால் குறித்த சாலைக்கு நேரில் சென்ற அதிகாரிகள் வெறும் 3 நாளில் விரைந்து சென்று நடவடிக்கை எடுத்துள்ளனர்
என தெரிவிக்கப்படுகிறது.இதுபோன்று பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பொது நலத்தோடு செயல்படும் சிறுவன் ஆரவ்வுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்துவருகின்றன