
மயிலார்தேவ்பல்லி, தெலுங்கானா: ஜாலியாக இருக்க பெற்ற மகன், அதுவும் மாற்று திறனாளி மகன் தொந்தரவாக இருந்ததால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்றுள்ளார் தாய்..
தெலங்கானா மாநிலம், மயிலார்தேவ்பல்லி மண்டலம் பகுதியை சேர்ந்தவர் சுல்தான் பேகம்.. வயது 40 இவருக்கு கடந்த . 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஹாஜி என்பவருடன் கல்யாணம் ஆனது.. இந்த தம்பினருக்கு 3 மகன்கள் உள்ளார்கள்
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஹாஜியை, சுல்தான்பேகம் விவாகரத்து செய்துவிட்டு, தனது அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்..
இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்த இஸ்மாயில் என்பவருடன் நட்பு அதிகரித்தது.. கல்யாணத்துக்கு முன்பே இஸ்மாயில் சுல்தான்பேகத்திற்கும் ரொம்பவும் பழக்கம்.. இருந்ததாக கூறப்படுகிறது.
இப்போது கணவனை பிரிந்த நிலையில், இஸ்மாயிலை வீட்டுக்கே வரவழைத்து அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார் சுல்தான்பேகம்.
ஒவ்வொரு முறை இஸ்மாயிலை வீட்டுக்கு வரவழைக்கும்போதெல்லாம், தன் அப்பா, அம்மாவை ஏதாவது சாக்கு சொல்லி வெளியே அனுப்பி வைத்துவிடுவாராம்..சுல்தான்பேகம்.
கடந்த மாதம் 22ம் தேதியும் வீட்டிற்கு இஸ்மாயிலை வரவழைத்துள்ளார்..
அப்போது சுல்தான்பேகத்தின் 2 மகன்களும் வெளியே சென்றுவிட்டனர்.
3வது மகன் அஜ்மத் மட்டும் இருந்தான்.. இவன் ஒரு மாற்றுத்திறனாளி ஆவான்.
இவனால் எங்குமே நடமாட முடியாத நிலை.. 7 வயதாகிறது.. எப்போது வந்தாலும் அஜ்மத் வீட்டிலேயே இருப்பதால், உறவுக்கு தொந்தரவாக இருப்பதாக சுல்தான்பேசமும் கள்ளக்காதலன் இஸ்மாயிலும் நினைத்தனர்..
அதனால் அந்த அஜ்மத்தை கொன்றுவிட முடிவு செய்தனர்..
அதன்படியே சிறுவன் அஜ்மத்தின் கழுத்தைநெரித்து கொன்றனர்..
பிறகு அவசர போலீஸ் 100-க்கு போன் செய்து மகனை யாரோ கொன்றுவிட்டதாக சுல்தான்பேகம் ஒப்பாரி வைத்தார்.
இதையடுத்து, மயிலார்தேவ்பல்லி போலீஸ் சிறுவனின் உடலை மீட்டு விசாரணையை ஆரம்பித்தனர்.
விசாரணையில் அக்கம்பக்கத்தினர், சிறுவன் சாவில் மர்மம் உள்ளதாகவும்., இஸ்மாயில் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வதாகவும் போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.
இதையடுத்து, போலீசார் இஸ்மாயிலை பிடித்து விசாரித்தபோதுதான், கள்ள காதலும், கருணையற்ற கொலையும் வெளிச்சத்துக்கு வந்தது.
இறுதியில் மற்ற 2 மகன்களையும் ஹாஜியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இப்போது கள்ளக்காதலர்கள் ஜெயிலில் உள்ளனர். பெற்ற மகனையே அதுவும் மாற்று திறனாளி குழந்தையை கள்ளத்தொடர்புக்காக.. கழுத்தை நெரித்து தாய் செய்த காரியம் தெலுங்கானாவை அதிர்ச்சியில் உள்ளாக்கி வருகிறது.