அம்பத்தூரில் பொம்மை வாங்குவதற்காக தன் சொந்த வீட்டிலேயே 45000 ரூபாய் திருடிய சிறுவனை காவல்துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர் .
சென்னை அம்பத்தூரில் ஆட்டோ டிரைவர் தங்கராஜ் தன் வீட்டிலிருந்து டிசம்பர் 20 ந்தேதி 45000 ரூபாய் காணவில்லை என காவல்துறையில் புகார் தந்தனர்.
காவல்துறை விசாரித்தபோது அங்கு உள்ள CCTV கேமரா காட்சிப்படி தங்கராஜின் இளைய மகன் மீது சந்தேகம் வந்து விசாரித்ததில் அவன் உண்மையை ஒப்புக்கொண்டான்.
தான் ஹெலிகாப்டர் பொம்மை வாங்குவதற்காக பணம் திருடினேன் என்றான். பணம் எடுக்கும்போது பார்த்த தனது 12 வயது சகோதரியை அடித்து மயக்கமுற செய்தததாகவும் கூறினான். மேலும் அவனிடமிருந்த 19500 மீதி ரூபாயை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர் .