Home அடடே... அப்படியா? இந்து மதத்தை மீண்டும் சீண்டும் ‘சினிமா தறுதலைகள்’! ‘தாராள பிரபு’வை குட்ட வேண்டிய நேரம்!

இந்து மதத்தை மீண்டும் சீண்டும் ‘சினிமா தறுதலைகள்’! ‘தாராள பிரபு’வை குட்ட வேண்டிய நேரம்!

daralaprabhu

தாராள பிரபு என்று ஒரு படம். அதன் பர்ட்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று டிவிட்டர் தளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. இதனை மிகவும் சந்தோஷமாக வெளியிடுவதாக அனிருத் ரவிச்சந்திரன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

தமிழ் ஆங்கிலம் என இரு மொழி எழுத்துகளில் வெளியான இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், இந்து மதக் கடவுளான படைப்புக் கடவுள் பிரம்மதேவனை கேலி செய்வது போல், மூன்று முகங்களுடன் தாமரை மலரில் அமர்ந்திருப்பது போல் டிசைன் செய்யப் பட்டிருந்தது.

ஸ்க்ரீன் ஸீன் ப்ரொடக்சனில் இது வெளிவருவதாகக் குறிப்பிட்டு, ஐந்து விரல்களை நீட்டிக் கொண்டு ஐந்து குழந்தைகளை கைகளுக்கு ஒன்றாகவும் மடியிலும் கிடத்தி, தாராளமாக குழந்தைகளை அள்ளித் தரும் பிரபு என்று தோன்றும் வகையில் படம் வரையப் பட்டிருக்கிறது.

குறிப்பாக, பிரபு என்ற தமிழ் எழுத்திலும், ஆங்கில எழுத்திலும் நடுவே விந்தணு வின் படம் வரையப் பட்டு, கேவலப் படுத்தியிருக்கிறார்கள்.

இது இந்து மத உணர்வாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சினிமா தறுதலைகள் இந்து மதத்தை மட்டுமே குறிவைத்து கேலி செய்து இயங்குகிறார்கள் என்பதும், அவர்களின் ரசனை, கற்பனை, செயலாக்கம் எல்லாம் கீழ்த்தரத்திலும் கீழ்த் தரமாக மிகவும் மலிந்து , சாக்கடையில் உழலும் பன்றிகளைப் போல் ஆகி விட்டது என்பதும் மீண்டும் மீண்டும் இது போன்ற செயல்களால் நிரூபிக்கப் பட்டு வருகிறது.

இத்தகைய கேவலங்களை கலை எனும் பெயரில் இவர்கள் கொடுப்பதால், இவர்களுக்கெல்லாம் விருதுகளும் அங்கீகாரமும் ஒரு கேடா என்று கேட்கத் தோன்றுகிறது. இதனால் தான் மத்திய அரசின் கலை விருதுகள் எதுவும் அண்மைக் காலமாக தமிழ் சினிமாக்காரர்களுக்கும் கழிசடைத்தனமான படைப்புகளுக்கும் கிடைக்காமல் போயிருக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version