திடீர் மோர்க்குழம்பு பொடிக்கு:
கொப்புரைத் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் வற்றல், கறிவேப்பிலை இவற்றை வெறும் வாணயில் புரட்டவும்.
இதனுடன் காய்ந்த இஞ்சி, சீரகம் சேர்த்து பொடித்து, ஒரு ஏர்-டைட் டப்பாவில் போட்டு ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.
ஒரு கப் கெட்டியான மோர் “அல்லது தயிருக்கு இரண்டு டேபிள் ஸ்பூன் விகிதத்தில் இந்தப் பொடியைக் கரைத்துக் கொள்ளவும்
.
தேங்காய் எண்ணெயில் கடுகு தாளித்து, சுலபமாகவும், வேகமாகவும் நறுக்கக்கூடிய வெண்டைக்காய் போன்ற காய் போட்டு வதக்கவும்.
கரைத்துக் வைத்துள்ள மோர்க் கலவை, உப்பு சேர்த்து ஒரு கொதியிட்டு இறக்கினால் திடீர் மோர்க்குழம்பு கமகம என்று போடு போடும்!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari