― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?டுவிட்டரு, பேஸ்புக்கு.. சமூகத் தளங்களில் இருந்து விலக முடிவு செய்தேன்: மோடி பகீர்.!

டுவிட்டரு, பேஸ்புக்கு.. சமூகத் தளங்களில் இருந்து விலக முடிவு செய்தேன்: மோடி பகீர்.!

- Advertisement -

சமூக வலைதளங்களிலிருந்து விலகலாமென யோசித்து வருவதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் பகீர் கிளப்பியுள்ளார்.

பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில்… தெரிவித்துள்ளதாவது:
பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுவது குறித்து, ஞாயிற்றுக்கழமை திட்டமிட்டேன்…

-என்று அவர் குறிப்பிட்டிருப்பது, சமூகத் தளங்களில் பரவலாக விவாதிக்கப் பட்டு வருகிறது.

பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கு தற்போது 53.3 மில்லியன் ஃபாலோயர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. உலக அளவில் மிகவும் பிரபலமான டிவிட்டர் கணக்காகவும் உள்ளது. இந்த நிலையில் திடீரென பிரதமர் மோடி இவ்வாறு சோசியல் மீடியாவை விட்டு விலகுவதாகக் கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்ப்டுத்தியுள்ளது.

அண்மைக்கால பொய்த் தகவல்கள் சோசியல் மீடியாக்களில் அதிகம் பரவி நாட்டில் வன்முறையை அதிகப் படுத்தியிருக்கிறது. பொய்களைச் சொல்லியே மக்களை நம்பவைத்து நாட்டுக்கு எதிரானவர்களாக மாற்றியிருக்கிறார்கள் பாகிஸ்தான் ஆதரவு குழுக்களைச் சேர்ந்த அடிப்படைவாத தேசதுரோகிகள்.

நாட்டின் எல்லை மட்டும் ராணுவத்தால் காவல் காக்கப் பட்டிருந்தால் போதாது… நாட்டுக்குள் இப்படி எல்லை தாண்டி வரும் கருத்து பயங்கரவாதத்துக்கும் கடிவாளம் போட்டாக வேண்டும். என்னதான் டிவிட்டர், பேஸ்புக் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அவ்வப்போது எதிர்ப்பு தெரிவித்தாலும், அவை சரியான நடவடிக்கை எடுப்பதில்லை.

இந்த நிலையில் பிரதமரின் அறிவிப்பு, இந்த சோசியல் மீடியாக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்து, வயிற்றில் புளியைக் கரைக்கக் கூடும். இதனால் அவை பொய்ச் செய்திகள் குறித்து கவனம் கொண்டு களத்தில் இறங்கக் கூடும். காரணம், இந்த சோஷியல் மீடியாக்களுக்கு உலகின் மிகப் பெரும் வர்த்தக சந்தையாக இந்தியா திகழ்வதும், இந்த வர்த்தகத்தை அவை இழக்க விரும்பாது என்பதும்தான்!


Senkottai Sriram

எக்ஸ்ட்ரார்டினரி சாமானியனுக்கு வரும் வியாதி… நாட்டின் பிரதம அமைச்சருக்கும் வந்துட்டுதா?! எதுனா மன அழுத்தம் வந்துதுனா… நான் பேஸ்புக்க விட்டு போப்போறேன்… ஒரு மாசம் லீவு போடப் போறேன்.. அப்டி இப்டில்லாம் உதார் விட்டுட்டு… இன்னும் சிலரு டெலிட் பண்ணிட்டு… வேறு வழியில்லாம அப்பாலிகா கமுக்கமா வேறு பேர்லயோ அல்லது புது அக்கவுண்ட்லயோ இன்று புதிதாய்ப் பிறந்தோம் ரேஞ்சுக்கு ஸீன் காட்டுவாங்க…

ஆனா இவுரு நெறய்யவே வலிமை வாய்ந்தவரு.
இவருக்கும் மன அழுத்தம் வந்திருக்கும். அது எதிர் கமெண்ட் போடுறவங்களால இல்ல…ன்னு நமக்கு தெரியும்.
ஆனா இந்த சோஷியல் மீடியாவ வெச்சிக்கிட்டு பாகிஸ்தான் பேக்ட் பரதேசி நாய்ங்க இங்க படுத்துற பாடு இருக்கே… அதப் பாத்து ஐயா ஃப்ரஸ்ட்ரேட் ஆயிட்டாரா?!
நம்மால முடிஞ்சதெல்லாம் வெறுமனே ரிப்போர்ட் அடிச்சிட்டு… அந்த ப்ரொஃபைல் டெலிட் ஆவுமா ஆவுமான்னு எழவ்வு காத்த எழவு மாதிரி மொறச்சினே பாத்துனு இருக்கனும்… ஆனா ஐயா லெவலே வேறயாச்சே

வேற எதுனா சோஷியல் மீடியா நம்ம நாட்டுல தயாரிச்சிருக்காங்களா? ஏதோ புதுசா ஜிபிஎஸ் சிஸ்டம் வர்றா மாதிரி…
இல்லே சீனா அதிபர் ரகசியமா மோடி மோடி… உங்க நாட்லயும் பேஸ்புக்கு, டுவிட்டரு, வாட்ஸ் அப்பு, இன்ஸ்டா எல்லாத்தயும் ப்ளாக் பண்ணிருங்க… எங்க நாட்ட மாதிரி பிரத்தியேக சோசியல் மீடியா வெச்சிக்குங்கன்னு ஐடியா கொடுத்துட்டாரா?

ஏற்கெனவே வாட்ஸ் அப்க்கு இணையா ஒரு ஆப்பு தயாரிக்கிறாங்களாம்..

நம்ம நாட்டுல மீடியாவ இந்த நாசகாரப் பயலுஹ கிட்ட கொடுத்துட்டே… நாடு அதலபாதாளத்துல போயிட்டிருக்கு… பாருங்க கொஞ்சம் கூட சூடு சொரண இல்ல… ஆர்.எஸ்.பாதின்னு ஒரு பாதிப் பய நங்குன்னு நச்னு வெச்சான் நாலு வார்த்த..
இந்த லெச்சணத்துல சோஷியல் மீடியா ஃபுல்லா தொறந்துவிட்ட மடமா எல்லாருக்கும் கொடுத்ததுல… எத்தன எத்தன உயிரிழப்புகள்…? எவ்ளோ பொய்யிங்க…

இத என்னிக்கோ செய்திருக்கணும்… இன்னும் தப்பல… சீக்கிரம் தடாலடியா ஒரு முடிவு அறிவியுங்க… அந்த ரூ.500 ரூ.1000 மாதிரியான அறிவிப்பா….

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version