Home அடடே... அப்படியா? பூரி ஜெகன்நாதர் கோவில் பணம்! ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதி உள்ள பாஜக!

பூரி ஜெகன்நாதர் கோவில் பணம்! ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதி உள்ள பாஜக!

யெஸ் பேங்கில் தங்கள் பணத்தை டெபாசிட் செய்த வாடிக்கையாளர்கள் தற்காலிகமாக, வரும் ஏப்ரல் 03, 2020 வரை 50,000 ரூபாய் வரை மட்டுமே எடுக்க முடியும் எனக் கூறியது.

யெஸ் பேங்கில் பெரிய தொகையினை டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களில் பூரி ஜெகன்நாதர் கோவிலும் ஒன்று.

சுமார் 545 கோடி ரூபாய் கோவில் பணம், யெஸ் பேங்கிக் சிக்கிக் கொண்டதையும் நாம் அறிவோம். இப்போது இந்த 545 கோடி ரூபாய் டெபாசிட் பணப் பிரச்சனை அரசியலாகத் தொடங்கி இருக்கிறது.

ஒடிஸா மாநிலத்தை கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து நவீன் பட்நாயக் தான் முடி சூடா மன்னனாக வளம் வந்து கொண்டு இருக்கிறார். ஒடிஸா மாநில அரசை விமர்சிக்க, இந்த பூரி ஜெகன்நாதர் பிரச்சனையில் கையில் எடுத்து இருக்கிறார்கள். அப்படி என்ன கேள்வி எழுப்புகிறார்கள்..?

பூரி ஜெகன்நாதர் கோவிலுக்குச் சொந்தமான 545 கோடி ரூபாய் பணத்தை யெஸ் பேங்கில் டெபாசிட் செய்யலாம் என எப்படி முடிவு செய்தது நிர்வாகம். பணத்தை டெபாசிட் செய்ய, யெஸ் பேங்கை தேர்வு செய்ய என்ன வழிமுறைகளைப் பின்பற்றி இருக்கிறார்கள் என வெள்ளை அறிக்கை சமர்பிக்கச் சொல்லி, கடந்த ஞாயிற்றுக் கிழமை கேள்வி எழுப்பி இருக்கிறது பாஜக.

“கடந்த மார்ச் 2019-ல் பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கு சொந்தமான பணம் பெரிய அளவில் யெஸ் பேங்கில் டெபாசிட் செய்யப்பட்டு இருக்கிறது. யெஸ் பேங்க், அரசு சம்பந்தப்பட்ட பணப் பரிவர்த்தனைகளைச் செய்யக் கூடிய வங்கிகள் குழுவில் இல்லை. இது ஒரு ஊழல். இந்த ஊழலை முறையாக விசாரிக்க வேண்டும்” எனச் சொல்லி இருக்கிறார் பாஜக ஒடிஸா மாநில பொதுச் செயலாலர் ப்ரித்விராஜ் ஹரிசந்தன்.

மேலும் பேசிய ப்ரித்வி ராஜ் ஹரி சந்தன் “அரசுக்கு இந்த பிரச்சனையில் பொருப்பு இருக்கிறது. வெறுமனே மத்திய அரசுக்கும், மத்திய ரிசர்வ் வங்கிக்கு கடிதங்களை எழுதிவிட்டு, தங்கள் கடமைகளில் இருந்து வெளியேறிவிடக் கூடாது” எனச் சொல்லி இருக்கிறார் ஒடிஸ மாநில பொதுச் செயலர். இப்படி அரசியல் ஒரு பக்கம் அனல் பறக்க, மறு பக்கம் இன்னொரு விஷயமும் நடந்து கொண்டிருக்கிறது.

ஒடிஸா மாநில நிதி அமைச்சர் நிரஞ்சன் பூஜாரி மற்றும் பூரி ஜெகன்நாதர் கோவில் நிர்வாகமும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஒடிஸாவில் இருக்கும் மத்திய ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கும், புரி ஜெகன்நாதரின் 545 கோடி ரூபாய் பணத்தைக் கேட்டு, கடிதங்களை எழுதி இருக்கிறார்களாம்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version