
தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஒட்டுநர் உரிமம், ஆர்.சி.புத்தகம், பழகுநர் உரிமம் புதுபித்தல், பெயர் மாற்றம் ஆகிய பணிகளை மேற்கொள்ள மேலும், சில மாதங்கள் நீட்டிப்பு செய்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தாக்கம் காரணமாக, வாகன பதிவுகளையும் புதுபிக்கவும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலம் என்பதால், வட்டார போக்குவரத்துக் அலுவலகங்களில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
டிரைவிங் லைசென்ஸ், வாகன இன்சூரன்ஸ் ஆகியவற்றை புதுப்பிக்க செப்.30 வரை அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கால் முடங்கியுள்ள வாகன இன்சூரன்ஸ், டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பு, பெர்மிட் போன்றவற்றிற்கான கால அவகாசம், ஜூன் மாதம் 30ம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய அரசு முன்னதாக அறிவித்திருந்தது. பின்னர், இந்த அவகாசத்தை ஜூலை 31 வரை மத்திய அரசு நீட்டித்து அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த அவகாசத்தை மத்திய வாகன போக்குவரத்துத்துறை மேலும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக இன்று வெளியான அறிவிப்பில், அனைத்து மோட்டார் வாகனம் தொடர்புடைய விவகாரங்கள் ஜூலை 31ம் தேதி வரையில் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அவை செப்டம்பர் 30 வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதை அடுத்து எந்தவித அபராதக் கட்டணமும் இன்றி நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.