சுவர் இடைவெளியில் சிக்கிய பூனை: 5 வருடமாக உணவளித்த முதியவர்

  5 வருடங்களாக சுவர்களின் இடைவெளிக்குள் சிக்கித் தவித்த பூனைக்கு முதியவர் ஒருவர் உணவளித்து வந்துள்ளார். இந்தச் செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 2010ம் ஆண்டு எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்த ஆப்டோ என்ற முதியவர், அங்கே இரு சுவர்களின் இடைவெளியில் குட்டிப்பூனை ஒன்று சிக்கியிருப்பதைக் கண்டார். அதனை வெளியே எடுக்க முயன்றும் அவரால் முடியவில்லை. இதனால், தினமும் ரயில் நிலையம் வந்த அவர், பூனைக்கு உணவளித்து வந்தார். துவக்கத்தில் அவரின் இந்தச் செயலை ஏளனமாகப் பார்த்த பலர் பின்னர் அவருக்கு உதவி செய்தனர். சுமார் 5 வருடங்கள் கடந்த நிலையில் அண்மையில் சுவருக்கு வெளியே தெரிந்த பூனையின் வளர்ந்த வாலைப் படமெடுத்து அதனையும் இது குறித்த செய்தியையும் பேஸ்புக்கில் வெளியிட்டார். இதை அறிந்த பிராணிகள் நல ஆர்வலர்கள் 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் பூனையை மீட்டனர். https://youtu.be/Suk5PNzKnKw