லீடர்’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார் நடிகர் ராணா டகுபதி. தமிழில் ஆரம்பம், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் “பாகுபலி” படமே இவரை இந்தியா முழுதும் பிரபலமாக்கியது. தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் டகுபதி சுரேஷ் பாபுவின் மகன்தான் ராணா.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்துவரும் ராணா, ஹைதராபாதைச் சேர்ந்த தனது காதலி மிஹீகா பஜாஜை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கடந்த மே மாதம் அறிவித்தார்.
பாகுபலி புகழ் ராணா டகுபதி மஹிகா பஜாஜ் என்பவரை காதலித்து வந்ததை அடுத்து, இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த சனிக்கிழமை திருமணம் செய்துக்கொண்டனர். கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனாலும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.
மிஹீகா பஜாஜ் – ராணாவின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டதால், சமீபத்தில் குடும்பத்தார் முன்னிலையில் ராணா – மிஹீகா நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணத்தில் சமந்தா, நாகசைதன்யா, வெங்கடேஷ், ராம் சரண் என இருவீட்டாரைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
லாக்டவுன் கெடுபிடிகள் காரணமாக திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் துல்கர் சல்மான் ராணா திருமணத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் “ராணா டகுபதி மற்றும் மிஹீகா இருவருக்கும் திருமண வாழ்த்துக்கள். அதை தவற விட்டதை வெறுக்கிறேன். உலகம் எப்போதும் போல சாதாரணமாக இருந்திருந்தால் நான் உங்களுடைய திருமணத்தில் நிச்சயம் பங்கு பெற்றிருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.