
மக்கள் விரோத. அரசியல் உள்நோக்கம் கொண்ட, கம்யூனிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கிற 26.11.2020 ஆட்டோ ஸ்டிரைக்கில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் பங்கேற்காது என்று தெரிவித்திருக்கிறார், இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் மனோகர்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
கொரோனா நோய் தொற்றின் ஊரடங்கு தளர்வு தற்போது தான் ஆட்டோ தொழிலாளர்களுக்கு பலன் அளிக்க ஆரம்பித்துள்ளது.
மேலும், 25ஆம் தேதி நிவார் புயல் காரணமாக தமிழகத்தின் 7 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என எச்சரிக்கப் பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வேலை நிறுத்தம் தேவையற்றது.
இதனால் பாதிக்கப்படபோவது ஆட்டோ தொழிலாளர்கள் தான். இடதுசாரிகள் தொழிற் சங்கங்களைப் பொறுத்தவரை எல்லாவற்றையும் அரசியலாக்க துடிக்கிறது.
மோட்டார் வாகன திருத்த சட்டத்தில் உள்ள பிரச்சனைகளை மத்திய, மாநில அரசின் கவனத்திற்கு, எங்களது அமைப்பு முன் வைக்க இருக்கிறது.
பேரிடர் காலங்களில் மக்கள் இன்னல்களை போக்குவதற்கு ஒவ்வொவரும் முன்வர வேண்டும். இந்த காலச் சூழ்நிலையில் இந்த வேலை நிறுத்தமானது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது.
எனவே, 26.11.2020 அன்று இடதுசாரி தொழிற் சங்கத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தத்தில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் கலந்துகொள்ளவதில்லை என முடிவு செய்துள்ளது.
அதே சமயம், நிவார் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக நிவாரணப் பணியில் பங்கேற்று துயர் துடைக்க ஆயத்தமாகி வருகிறது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.