
பொது இடத்தில் மாஸ்க் அணியாமல் கூட்டத்தில் கலந்து கொண்டார் உதயநிதி ஸ்டாலின். அடுத்து திமுக., ஆட்சிக்கு வந்துவிட்டால், தங்களை பழி வாங்கி விடுவார்களே என்ற அச்சத்தில் இருக்கும் போலீஸார், இதனால் பயந்து போய் நடவடிக்கை எதுவும் உதயநிதி ஸ்டாலின் மீதோ, திமுக.,வினர் மீதோ எடுக்கவில்லை!
திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பிரச்சார பயணத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கி தஞ்சை மாவட்டத்திற்கு கடந்த 25ந் தேதி வருகை தந்தார்
அப்போது தமிழகத்தில் நிவர் புயல் அறிவிப்பால் தனது பிரச்சார பயணத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் 28ந் தேதி தஞ்சையிலிருந்து பிரச்சார பயணம் தொடரும் என்று தெரிவித்திருந்தார் அதன்படி தஞ்சை மாவட்டத்தில் பிரச்சார பயணம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் தஞ்சையை அடுத்த தென்னமநாட்டில் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்
அப்போது அவர் பேசும் போது அதிமுக எம்பியின் பெயரை மாற்றி மாற்றி கூறி வேளாண்மை திருத்தசட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து பின்னர் பாஜகவிற்கு ஆதரவாக அதிமுக எம்பிக்கள் வாக்களித்தனர் என்று தெரிவித்தார் முன்னதாக கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு திமுக நிர்வாகிகள் மாஸ்க் மற்றும் பச்சை துண்டுகளை வழங்கினர்
ஆனால் பொது இடத்தில் மண்டபத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் மாஸ்க் அணியாமல் கூட்ட்த்தில் கலந்து கொண்டார் மேலும் திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரன் காலடி அருகில் உட்கார்ந்து கொண்டும் மற்றொரு எம்எல்ஏ ராமச்சந்திரன் நின்று கொண்டும் இருந்தார் பின்னர் கட்சியினர் வற்புறுத்த உதயநிதி ஸ்டாலின் அருகில் எம்எல்ஏக்கள் உட்கார்ந்தனர்.