
முனைவர் கு.வை.பா. அவர்களின் சிறப்பு வானிலை அறிக்கை எண் 2, 02.12.2020, காலை மணி 0945
(1) தென் மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ‘புரெவி’ புயல் கடந்த ஆறு மணி நேரமாக மேற்கு வடமேற்கு திசையில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்துள்ளது.
(2) இன்று 02.12.2020 அதிகாலை 0530 மணி அளவில் இலங்கையின் திரிகோணமலைக்கு கிழக்கு தென் கிழக்கு திசையில் 240 கிமீ. தூரத்தில் நிலைகொண்டுள்ளது.
(3) இது மேற்கு வட மேற்காக நகர்ந்து இலங்கையின் திரிகோணமலைக்கு அருகே 02.12.2020 அன்று மாலை அல்லது இரவு கரையைக் கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்று 80 முதல் 90 கி.மீ வரை வீசக்கூடும்.
(4) அதன் பின்னர் மேற்கு நோக்கி நகர்ந்து 03.12.2020 அன்று காலை மன்னார் வளைகுடாப் பகுதியில் கடலுக்குள் வரும். 03.12.2020 அன்று நண்பகல் நேரத்தில் பாம்பனுக்கு அருகில் புயல் நிலைகொள்ளும். பின்னர் அது மேற்கு தென் மேற்கு திசையில் நகர்ந்து தென் தமிழகக் கடற்கரையை கன்னியாகுமரி பாம்பன் இடையே 04.12.2020 அன்று அதிகாலை கரையைக் கடக்கக்கூடும்.
(5) 02.12.2020 அன்று காலையில் இருந்து 04.12.2020 காலை 1730 மணி வரை இந்த சிஸ்டம் புயலாகவே தனது வலிமையை தக்க வைக்கும் வாய்ப்பு இருப்பதால் தென் தமிழக மாவட்டங்களில் மற்றும் இலங்கையில் 02, 03 மற்றும் 4ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் காற்றும் மிக வலுவாக இருக்கும்.
(7) மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறார்கள்.
கனமழை எச்சரிக்கை – தமிழகதில் கன்னியாகுமரி, தூத்துகுடி, திருநெல்வேலி, தென்காசி, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களிலும் தென் கேரளாவிலும் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் (20 செ.மீக்கு மேல்) ஒரு சில இடங்களில் கனமழை (7 செ.மீக்கு மேல்) மற்றும் மிகக் கனமழையும் (12 செ.மீக்கு மேல்) பெய்யும்.
வடதமிழகம், புதுச்சேரி, மாஹே, காரைக்கால், வட கேரள மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் மிகக் கனமழையும் பெய்யும்.