![spbalasubramaniam](https://i0.wp.com/dhinasari.com/wp-content/uploads/2019/06/spbalasubramaniam.jpg?ssl=1)
மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உள்பட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பத்ம விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் நாட்டின் மிக உயரிய விருதுகளாகும். 1954-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின் போது அறிவிக்கப்படுகின்றன.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், சிவில் சேவை, வா்த்தகம் மற்றும் அனைத்துத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க சாதனை அல்லது சேவை புரிந்தவா்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் நிகழ்வாண்டில் 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 10 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளும், 102 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும் என மொத்தம் 119 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கலைப் பிரிவில் மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம விபூஷண் விருது:
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே – ஜப்பான்
டாக்டர் பெல்லே மொனப்பா ஹெக்டே – கர்நாடகம்
நரிந்தர் சிங் கபானி – அமெரிக்கா
மௌலானா வஹிதுதீன் கான் – தில்லி
பி.பி. லால் – தில்லி
சுதர்சன் சாஹு – ஒடிசா