― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?மகாபெரியவா பார்வையில்... கிரேடா தன்பர்க், திஷா ரவி!

மகாபெரியவா பார்வையில்… கிரேடா தன்பர்க், திஷா ரவி!

- Advertisement -
disha-ravi-greta-thanburg

கருத்து: வேதா.டி.ஸ்ரீதரன்

அறிமுகம் 1

‘தாங்கி நிற்பது தர்மம்’ என்பது மகாபாரதம் சொல்லித் தரும் ஒற்றை வரிப் பாடம்.

அதேநேரத்தில், ‘தர்மம் என்பது மிகவும் நுண்ணியது. அதைப் புரிந்து கொள்ளும்போது நம் மனதில் பல ஐயங்கள் ஏற்படும்’ என்றும் அதே மகாபாரதம் கூறுகிறது. நம் தேசத்து ரிஷிகள் அனைவருமே அப்படித்தான் சொல்லி இருக்கிறார்கள்.

அப்படியானால், நம்மைப் போன்ற சாமானியர்கள் தர்மத்தை எவ்வாறு புரிந்து கொள்வது?

இதற்குச் சில பிரமாணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் முக்கியமானதும் எளிமையானதுமாக இருப்பது குருவின் வழிகாட்டுதல்.

இங்கே நாம் பார்க்க இருக்கும் விஷயம், ஜகத்குருவாம் நம் காஞ்சி ஆசார்யரின் வழிகாட்டுதல்.

அறிமுகம் 2

பூஜ்ய மகா பெரியவா அவர்கள் ஒருமுறை ஶ்ரீ ரா. கணபதி அண்ணாவுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது ஶ்ரீராமனுக்கும் ஶ்ரீகிருஷ்ணனுக்கும் இடையில் காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளை விவரித்தார். பெரியவா கூறிய விஷயங்களை அண்ணா என்னிடம் பகிர்ந்து கொண்டார். அதை நான் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

இதில் எழுத்து வடிவம் மட்டுமே என்னுடையது.

அறிமுகம் 3

தற்போதைய சூழ்நிலையில் – குறிப்பாக, நம் தாய்த்திரு நாட்டுக்கு எதிராக சதி செய்த பெண்கள் விஷயத்தில் – நாட்டின் நிர்வாகத் தலைமையும் நீதி வழங்கும் பொறுப்பில் இருப்பவர்களும் எத்தகைய பார்வையைக் கைக்கொள்ள வேண்டும் என்பதற்கு இது வழிகாட்டியாக அமைய முடியும் என்பதாலேயே இதை இப்போது வெளியிடுகிறேன்.


kanchi mahaperiyava

ஒருமுறை அண்ணாவிடம் பெரியவா,, ­“ராமன், கிருஷ்ணன் ரெண்டு பேருமே மகாவிஷ்ணுவோட அவதாரம். இவா ரெண்டு பேரையும் என்னிக்காவது கம்பேர் பண்ணிப் பார்த்திருக்கியோ?“ என்று கேட்டார்.

“இல்லை, பெரியவா.“

சிறிது நேர மௌனத்துக்குப் பின்னர் பெரியவா தொடர்ந்தார்:

“பிள்ளை இல்லாத குறை போகணும்னு தசரதன் புத்ர காமேஷ்டி எல்லாம் பண்ணி வேண்டிண்டான். புத்ர பாக்கியமும் கெடச்சுது. பெத்தவாளுக்கு பரம சந்தோஷம். இதுதான் ராமாவதாரம். கிருஷ்ணன் விஷயத்தில கதையே வேற. அவன் அநாயாசமா பிறந்தான். அவனோட அப்பா அம்மாதான் தவியாத் தவிச்சுப் போயிண்டிருந்தா.

“இவன் ஜனங்கள்லாம் முழிச்சிண்டிருக்கற நேரத்தில அரண்மனையில ராஜபோகமா பிறந்தான். அவனோ நட்டநசியில காராகிருகத்தில திருட்டுத்தனமா பிறந்தான். இவன் பிறந்த இடத்திலயே அம்மா அப்பா கூடவே வளர்ந்தான். அவனோ பிறந்ததுமே இடத்தையும் அம்மா அப்பாவையும் மாத்திண்டுட்டான்.

“இவனோ பரம பவ்யம். அவனோ குறும்புக்காரன். குழந்தை ராமன் சத்தியசீலன்னா, பாலகிருஷ்ணனோ வெண்ணெய திருடிட்டு இல்லாத பொய்யெல்லாம் சொல்லுவான்.

“இவனுக்கு முறைப்படி கல்வி, உபதேசம் எல்லாம் கிடைச்சது. அதுவும் போக, விசுவாமித்திரரும் தன் பங்குக்கு உபதேசம் பண்ணினார். இதெல்லாம் போதாதுன்னு வனவாசத்தப்போ ஒவ்வொரு குருவா தேடித்தேடிப் போய் உபதேசம் கேட்டுண்டான். ஆனா கிருஷ்ணனோ, குருமுகமா உபதேசம் கேட்டுக்கணுமேங்கற ஒரே காரணத்துக்காக சாந்தீபனிகிட்ட குருகுல வாசம் பண்ணினான். அவனுக்கு சாந்தீபனி உபதேசம் பண்ணினார்ங்கறதைவிட அவருக்கு அவன் அனுக்கிரகம் பண்ணினான்ங்கறதுதான் சரி.

“தர்மத்தைத் தெரிஞ்சுண்டு அதன்படி நடக்கணும்ங்கறதில ராமனுக்கு ரொம்ப அக்கறை. அதனால, உபதேசம் கேட்டுக்கறதில இவனுக்கு ரொம்ப ஆர்வம். இவனுக்குக் கிடைச்ச உபதேசம்தான் யோக வாசிஷ்டம். ஆனா கிருஷ்ணனோ உபதேசம் பண்ணினவன். நான் என்ன சொல்றேனோ அதுதான் தர்மம்னு சொன்னான், கிருஷ்ணன். அவன் பண்ணின கீதோபதேசத்தைத்தான் உபநிஷத்தோட சாரம்னு எல்லாரும் கொண்டாடறோம்.

“இவன் கோதண்டபாணி. அவனோ சக்ரதாரி.

“இவன் ஏக பத்னி விரதன். அவனோ அதுக்கு நேர்மாறு.

“தான் மகாவிஷ்ணுவோட அவதாரம்னே இவனுக்குத் தெரியாது. கருடன் சொல்லித்தான் தெரிஞ்சுண்டான். அவனோ நான்தான் பூர்ணாவதாரம்னு டிக்ளேர் பண்ணினான். நான்தாண்டா பரப்பிரம்மம்னு சொல்லி தன்னோட விசுவரூபத்தையே காட்டினான்….“

(பெரியவா சொன்னதாக அண்ணா கூறிய இந்த வேற்றுமைப் பட்டியல் மிகவும் பெரியது. எனது நினைவில் இத்தனை விஷயங்கள்தான் பதிவாகியுள்ளன.)

வேற்றுமைகளைக் குறிப்பிட்டு முடித்ததும் பெரியவாளிடமிருந்து அடுத்த கேள்வி வந்தது.

“ஆனா, ஒரே ஒரு விஷயத்தில மட்டும் இவா ரெண்டு பேருக்கிடையில ஹன்ட்ரட் பெர்ஸன்ட் ஒற்றுமை தெரியுமோ?“

பெரியவா குறிப்பிடும் ஒற்றுமை அம்சம் எது என்பதை யூகிக்க முடியாத அண்ணா மௌனமாக இருந்தார். மீண்டும் பெரியவாளே தொடர்ந்தார்:

“இவன் தாடகையை ஸம்ஹாரம் பண்ணினான். அவன் பூதனையை ஸம்ஹாரம் பண்ணினான். ஒரு பொம்மனாட்டி ராக்ஷஸியா இருந்தாள்னா – பிறத்தியார் உயிரைக் குடிக்கறவளா இருந்தாள்னா – சமுதாயத்தில அப்பாவிகளுக்குக் கெடுதல் பண்றவளா இருந்தாள்னா – அவளைப் பொம்பளைன்னு பார்த்து இரக்கம் காட்டக்கூடாது, அவளை உடனடியா ஸம்ஹாரம் பண்ணிடனும்ங்கறதுதான் ரெண்டு பேர் வாழ்க்கையிலயும் இருக்கற பெரிய்ய்ய்ய ஒற்றுமை“ என்று முடித்தார் பெரியவா.


இதன் மூலம், திஷா ரவி, கிரேடா தன்பர்க் முதலியோர் விஷயத்தில் தார்மிக அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மகா பெரியவா தெளிவாகவே வழிகாட்டியுள்ளார். இங்கே தர்மக் குழப்பத்துக்கு இடமே இல்லை.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version