Home அடடே... அப்படியா? விநோதமா இருக்கேன்னு… வீட்டுக்கு தூக்கிட்டு வந்தா… ரூ.2 கோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்!

விநோதமா இருக்கேன்னு… வீட்டுக்கு தூக்கிட்டு வந்தா… ரூ.2 கோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்!

வினோதமாக இருக்கிறதே என்று வீட்டுக்கு எடுத்து வந்தால்… இரண்டு கோடி ரூபாய் லாபம்.

பொழுதுபோக்கிற்காக பீச்சுக்கு சென்ற ஒரு பெண்ணுக்கு ஒரு வினோதமான பொருள் கண்ணில்பட்டது. அருகில் சென்று பார்த்தபோது ஒரு மீனைப் போல் நாற்றம் எடுத்தது. சிறிது நேரம் அப்படி இப்படி பார்த்து விட்டு அது என்னதான் பார்ப்போமே என்று வீட்டுக்கு எடுத்துச் சென்றார்.

அதைப் பற்றி ஆராய்ந்த போது அது கோடிக்கணக்கான பண மதிப்பு மிகுந்தது என்று தெரிந்து வாயடைத்துப் போனார்.

அந்த பொருள் என்னவென்று தெரியுமா?

திமிங்கிலம் வாந்தி எடுக்கும் போது வெளியில் வந்து விழும் திரவம் அது. இதனை அம்பர்கிரீஸ் என்பார்கள்.

தாய்லாந்தில் உள்ள நகோன் சி தம்மரத் பிராவின்சில் வசிக்கும் சரிபோர்ன் நயாம்ரின் (49) என்ற பெண்மணி தன் வீட்டுக்கு அருகில் உள்ள கடற்கரைக்கு பிப்ரவரி 23ஆம் தேதி சென்ற போது கிடைத்ததே இந்த அம்பர்கிரீஸ்.

இதன் மதிப்பு நம் இந்திய பணத்தின் படி சுமார் இரண்டு கோடி ரூபாய். இது 24 இன்ச் நீளம் 12 இன்ச் அகலம் 7 கிலோ எடையோடு இருந்தது.

ஸ்பேர்ம்ஸ் வேல்ஸ் ரகத்தைச் சேர்ந்த திமிங்கிலங்கள் பிற உயிரினங்களை விழுங்கும் போது அவற்றின் கூர்மையான பகுதிகளால் திமிங்கலத்தின் வயிறு பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அம்பர்கிரீஸ் என்ற திரவத்தை சுரக்கும். இது வாயிலிருந்து வெளியில் வரும்போது உருண்டையாக வந்துவிழும். அது சாம்பல் நிறத்தில் ஒரு மெழுகு உருண்டை போல் இருக்கும். இது எரியக்கூடிய இயல்பு கூட கொண்டது.

மிகவும் விலை மதிப்பானது. ஆல்கஹால் குளோரோஃபார்ம் மற்றும் பிற எண்ணெய்களின் கரையக்கூடியது. இதனை அதிகமாக சுகந்த திரவியங்கள் தயாரிப்பதில் பயன்படுத்துவார்கள். அதிகமாக கிடைக்காது. மிகவும் அரிதாகவே கிடைப்பதால் இதனை நீரில் மிதக்கும் தங்கம் என்று கூட அழைப்பார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version