எனக்கு குழந்தை தரும் ஆணுக்கு பணம் தருவேன் என்று ஒரு இளம்பெண் ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு ருமேனியா நாட்டின் திமிசோராவை சேர்ந்த 25 வயதான அடிலினா அல்பு, தனது ஃபேஸ் புக் பக்கத்தில் அளித்துள்ள பதிவு ஆண்களின் புருவத்தை உயர்த்த செய்துள்ளது. அடிலினா அல்பு தனது ஃபேஸ் புக் பக்கத்தில், ”மனதளவில் ஆண்கள்எல்லாருமே முதிர்ச்சியடையாதவர்களாக இருக்கிறார்கள். ஒரு ஆணை சந்திப்பது பிரச்சனை இல்லை. ஆனால், குழந்தை தேவைப்படும் ஒரு ஆணை சந்திப்பதே பிரச்சனை.
அதற்காக, எந்த உபயோகமும் இல்லாத உறவில் என் நேரத்தை வீணடிப்பதை நான் விரும்பவில்லை. நான் குழந்தை பெற உதவுபவர்களுக்கு 350 பவுண்ட் பணம் தருகிறேன். உங்களுக்கு சுகம், எனக்கு குழந்தை அவ்வளவுதான். இதற்கு சம்மதிப்பவர்கள், மருத்துவரிடம் கருவுறும் சோதனை செய்துவிட்டு வர வேண்டும். மேலும், பெற்றோர் உரிமைகளை எனக்கே அளித்துவிட வேண்டும். ஆண்கள் முதிர்ச்சியடையாதவர்கள், எப்போதும் தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பவர்கள். நான் முதிர்ச்சியடைந்தவள், சுதந்திரமானவள், எனக்கு ஒரு குழந்தை தேவை” என்று பதிவு செய்துள்ளார். பல பேஸ்புக் பயனாளர்கள், அடிலினாவின் பதிவுக்கு முகம் சுளிக்க வைக்கும் விமர்சனங்களை குவித்தபடி இருந்தாலும், அவரது சுதந்திரமான குணத்தை சிலர் பாராட்ட தவறவில்லை.