Homeஅடடே... அப்படியா?Google இன் மடிக்கும் செல்போன்! 4 வகைகள்..! ‌

Google இன் மடிக்கும் செல்போன்! 4 வகைகள்..! ‌

mobile
mobile

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் (google ) தனது அடுத்த பிக்சல் மொபைல் போனான பிக்சல் 6 சீரிஸை விரைவில் சந்தைப்படுத்தவுள்ளது.

இந்நிலையில் ஒரு வருடத்திற்கும் மேலாக மடிக்கும் மொபைல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. அதுகுறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக ‘பாஸ்போர்ட்(passport) ” என்ற பெயரில் தனது ஃபோல்டிங் மொபைலை சந்தைப்படுத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

தற்போது ஜம்போ ஜாக் ( jambojack ) என்ற பெயரிலான மடிக்கும் பெயரிலான மடிக்கும் பொபைலை உருவாக்கி வருவதாக சில நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக வெளியான பாஸ்போர்ட் மடிக்கும் மொபைல்போனை ஒப்பிடுகையில் ஜம்போஜாக் முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக இருக்கிறது.

இது அந்த மொபைலில் இருந்து மாறுபட்ட ஒன்றாகவோ அல்லது அதிலிருந்து புதிப்பிக்கப்பட்ட ஒன்றாகவோ இருக்கும் என கருதப்படுகிறது. மேலும் முன்னதாக வெளியான தகவலின் அடிப்படையில் google folding mobile ஆனது android 12.1 இயங்குதளத்தை கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

கூகுளின் jambojack மடிக்கும் மொபைல் தோற்றத்தில் samsung நிறுவனத்தின் Z Flip மொபைல்போன்களை போன்று உள்ளது. இந்த மொபைலை இந்த ஆண்டு இறுதியில் கூகுள் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக வரவிருக்கும் கூகுளின் pixel event இல் jambojack மொபைல்போனை அந்நிறுவனம் அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. தற்போது இவ்வகை மாடல்கள் prototype stage என அழைக்ககூடிய சோதனை முயற்சியில் உள்ளன.

இந்த மொபைல்போன்களையும் கூகுள் ‘பிக்சல்’ மொபைல்போன் வரிசையில் அறிமுகப்படுத்தவுள்ளது. google pixel jumbopack என்ற பெயரில் அறிமுகமாகலாம்.

twitter

திறந்த நிலை( open) , மூடிய நிலை (close) , பாதி திறந்த நிலை (half open) , பின்பக்கமாக மடங்கிய நிலை (flip) என நான்கு வகைகளில் இந்த மொபைலை பயனாளர்கள் பயன்படுத்தமுடியும்.

மேலும் ஒவ்வொரு ட்ஸ்பிளேவுக்கும் ஏற்ற மாதிரியான திரை கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மடக்குவதற்கு ஏற்ப LTPO OLED திரை வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டே ஆண்ட்ராய்ட் 11 இயங்குதளத்தில் கூகுளின் பாஸ்போட் மொபைல்போன் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூகுள் அதனை கூகுள் சில காரணங்களால் வெளியிடவில்லை.

இந்நிலையில் தற்போது கசிந்துள்ள தகவலின் அடிப்படையில் ஜம்போஜாக் மொபைலானது விரைவில் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டை கலக்க போகிறது. முன்னதாக சாம்சங், ஹுவாய், சியோமி போன்ற நிறுவனங்கள் தங்களில் ஃபோல்டிங் மொபைலை சந்தைப்படுத்தியுள்ளன.

இதில் சாம்சங் வெற்றியும் அடைந்துள்ளது. அதேபோல OPPO, VIVO போன்ற நிறுவனங்களும் விரைவில் தங்கள் மடிக்கும் மொபைலை இந்தியாவில் சந்தைப்படுத்தும் முயற்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

Follow Dhinasari on Social Media

19,141FansLike
376FollowersFollow
67FollowersFollow
74FollowersFollow
2,835FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ஆஸ்கர் விருது கலை அறிவியல் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா..

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர்...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலி..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நுரையீரல்...

அஞ்சலி-பூ படத்தில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ராமு காலமானார்..

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர்...

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

Latest News : Read Now...

Exit mobile version