சிறுத்தை தாக்குதலில் இருந்து அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்மணி, லேசான காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை கோரேகான் (Goregaon) நகரை சார்ந்த பெண்மணி, நேற்று இரவு நேரத்தில் தனது வீட்டிற்கு வெளியே அமர்ந்துகொண்டு இருந்தார். இதன்போது, அவருக்கு பின்புறம் அங்கு ஏற்கனவே பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று வந்துள்ளது.
முதலில் பெண்மணி இதனை கவனிக்காத நிலையில், அவரருகே சிறுத்தை அமைதியாக வந்து தாக்க முயற்சித்துள்ளது. சிறுத்தை அருகே வந்ததும் எதேச்சையாக பெண்மணி திரும்பி பார்க்கவே, அங்கிருந்து எழுந்திருக்க முயற்சித்துள்ளார்.
சுதாரித்துக் கொண்ட சிறுத்தையும் பெண்மணியை கொன்று சாப்பிடும் நோக்கி அவர் மீது தாக்கவே, பயந்துபோன பெண்மணி அபயக்குரல் எழுப்பியவாறு சிறுத்தையுடன் சண்டையிட்டுள்ளார்.
இதன்பின்னர், குடும்பத்தினர் பெண்ணின் அபயக்குரல் கேட்டு வந்துவிடவே, சிறுத்தையும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.
லேசான காயத்துடன் பாதிக்கப்பட்ட பெண்மணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
#WATCH | Mumbai: A woman barely survived an attack by a leopard in Goregaon area yesterday. The woman has been hospitalised with minor injuries.
— ANI (@ANI) September 30, 2021
(Visuals from CCTV footage of the incident) pic.twitter.com/c1Yx1xQNV8