மலை கிராம மக்கள் தேர்தலில் பணம் மற்றும் பொருட்களை வாங்க மாட்டோம் என வீட்டின் சுவரில் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குறிஞ்சி நகர் மலை கிராமத்தில் 2௦-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் 80-க்கும் அதிகமான ஓட்டுகள் இருக்கின்றது.
இந்நிலையில் 6-ஆம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்பின் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் பொருள் மற்றும் பணம் வாங்க மாட்டோம் என அப்பகுதி மக்கள் முடிவெடுத்து தங்கள் வீட்டு சுவரில் நோட்டீஸ் அடித்து ஒட்டியுள்ளனர்.
அதில் வேட்பாளரிடம் ஓட்டு போடுவதற்கு பொருள் மற்றும் பணம் வாங்க மாட்டோம் எனவும், பணம் கொடுத்து எங்களை சிறுமைப்படுத்தாதீர்கள் எனவும் அச்சிட்டு ஒட்டியுள்ளனர்.
இதனை அடுத்து கழிவுநீர் கால்வாய், சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் இருந்து வருகிறோம்.
அதனால் வாக்களிப்பதற்கு பணம் வாங்காமல் நல்ல ஒரு நபருக்கு ஓட்டு போட்டு வெற்றி பெறச் செய்து எங்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளை அவர் தானாகவே செய்து தருவார்.
மேலும் அவர் செய்து தராத நிலையில் அவரைக் கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்