
நெதர்லாந்தில் லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நவீன வகை ஊசியே இல்லாத சிரஞ்ச்யை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நவீன வகை சிரஞ்சி-ல் ஏற்றப்படும் மருந்து மில்லி செகண்டில் சூடாகி நீராவியாக மாறி, நோயாளி மீது தெளிக்கும் போது தோலில் உள்ள நுண் துவாரங்களின் வழியாக உடலில் சென்று செயலாற்றும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அடுத்த 3 ஆண்டுகளில் இந்த கண்டுபிடிப்பு பொது பயன்பாட்டுக்கு வரும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த சிரஞ்சி-ஐ செலுத்திக் கொள்பவர்களுக்கு கொசுக்கடியை விட மிகக்குறைந்த அளவிலான உணர்ச்சியே ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.
ஊசி போட்டுக்கொள்ள தயங்குபவர்களுக்காகவும் மருத்துவ கழிவுகளை குறைக்கும் நோக்கிலும் இந்த syringe கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.