Home அடடே... அப்படியா? 60 கிலோ தங்க நகைகள் பரிசளித்த வருங்கால கணவர்! அணிந்து வந்த மணமகள்!

60 கிலோ தங்க நகைகள் பரிசளித்த வருங்கால கணவர்! அணிந்து வந்த மணமகள்!

The bride 1
The bride 1

பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்து அநேகரின் பேராசையாக உள்ளது. அதிலும் குறிப்பாக திருமணம் என்று வந்து விட்டால் இருக்கும் சொத்துக்களை எல்லாம் விற்று விட்டு கிலோ கணக்கில் நகை போட வேண்டும் என்று நினைக்கின்றனர்

முன்பு எல்லாம் ஐம்பது சவரன், நூறு சவரன் நகை போட்டாலே ஆச்சர்யமாக பார்க்கும் சூழல் இருந்தது. ஆனால் தற்போது எல்லாம் அது சர்வ சாதாரணமாகி விட்டது. இது தமிழ்நாட்டில் மட்டும் இல்லை, சீனாவில் இதை விட ஆச்சர்யமான சம்பவம் நடந்துள்ளது.

மணப்பெண் ஒருவர் அணிந்து வந்த தங்கம் காண்போரை கிறுகிறுக்க வைத்துள்ளது. திருமணத்தன்று சுமார் 60 கிலோ தங்க நகைகளை அவர் அணிந்து வந்து, வருங்கால கணவரை கரம் பிடித்துள்ளார்.

என்ன 60 கிலோ தங்க நகைகளா? வாய்மேல் கை வைக்க வேண்டாம். இது உண்மை தான். வருங்கால கணவர், தனது மனைவியின் மீது கொண்ட பிரியம் காரணமாக 60 கிலோ நகைகளை பரிசளித்துள்ளார்.

The bride gold

கணவரின் பிரியத்தை போற்றும் வகையில், திருமணத்தன்று அவர் கொடுத்த அனைத்து நகைகளையும் அணிந்து வந்து அவருக்கே சர்பிரைஸ் கொடுத்துவிட்டார்.

இந்த சம்பவம் சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் நடைபெற்றுள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெற்ற அந்த திருமணத்தில் மணப்பெண் வெள்ளை நிற உடை அணிந்திருக்கிறார். கைகளில் பூச்செண்டு ஒன்றை பிடித்திருக்கும் அந்தப் மணப்பெண்ணின் கழுத்து முழுவதும் தங்க ஆபரணங்கள் பல்வேறு வடிவங்களில், ஆபரணமாக செய்யப்பட்டு ஜொலிக்கிறது.

60 கிலோ தங்கமும் கழுத்து முதல் இடுப்பு வரை தொங்கவிடப்பட்டிருந்தது. இதனால் அந்தப் பெண்ணால் இயல்பாக நடக்க முடியவில்லை. 60 கிலோ தங்கத்தின் எடையை யோசித்துபாருங்கள்.

அதனைப் போட்டுக் கொண்டு திருமண நாளில் உலாவுவது என்பது சாதரண விஷயமா?. இந்நிலையில், அந்த தம்பதியின் வீடியோ இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் வைரலாகியுள்ளது.

இது குறித்து வெளியாகியுள்ள தகவலில், இருவரும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மணமகளுக்கு சீதனமாக சுமார் 60 நெக்லஸ்கள், இரண்டு வளையல்கள் என கொடுத்துள்ளார்.

அவற்றை அணிந்துகொண்டு மணமகளால் திருமண சடங்குகளை செய்ய முடியவில்லை. இது அங்கிருந்த விருந்தினர்களுக்கு பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version