― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?எல்லோரும் கொண்டாடுவோம்... நல்லோரின் பேரைச் சொல்லி... இல்லாதோர் வாழ்வை எண்ணி..!

எல்லோரும் கொண்டாடுவோம்… நல்லோரின் பேரைச் சொல்லி… இல்லாதோர் வாழ்வை எண்ணி..!

- Advertisement -
deepavali campaign

கட்டுரை: முரளி சீதாராமன்

தீபாவளி… இந்துக்களே இது நமது பண்டிகை! அவரவர் சக்திக்கு ஏற்ப – புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசு மத்தாப்புக்கள் என்று வாங்கி மகிழ்வுடன் கொண்டாடுங்கள்!

இந்த நேரம்தான் சில “அறிவுஜீவி” களுக்கு சிந்தனை அரிப்பு எடுக்கும்! “காசைக் கரி ஆக்கலாமா? நல்லதாக அந்தக் காசுக்கு நான்கு புத்தகங்கள் வாங்கலாமே?”

பதில் கொடுங்கள் – (வாயை) மூடிக் கொண்டு போடா வெண்ணை! எந்த நேரத்தில் எதை வாங்கவேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்!

அது வெறும் “கேப்பு” (பொட்டு வெடியோ) – பூச்சட்டியோ, கம்பி மத்தாப்போ, சங்கு சக்கரமோ, ஒலைப் பட்டாசோ, ஊசிப் பட்டாசோ, ஆனை வெடியோ, பத்தாயிரம் வாலா சரவெடியோ…

எங்கோ சிவகாசியையும் அதைச் சுற்றி எத்தனையோ சிற்றூர்களிலும் கிராமங்களிலும், எத்தனையோ ஆயிரம் உழைப்பாளி விரல்களின் உழைப்பு அது!

கந்தகமும், மருந்து நெடியும் காய்ப்புக் காய்த்த விரல்களில் முற்றாகப் பதிந்து போய் – முகரும் விரலிலும், உண்ணும் சோற்றிலும் நிரந்தரமான கந்தக வாடையுடன்…

இந்தப் பட்டாசுத் தொழிலையே நம்பிப் பிழைக்கும் எத்தனையோ ஆயிரக் கணக்கான குடும்பங்களின் உழைப்பு அது!

நீங்கள் வாங்கும் சிறுவெடியும் எங்கோ ஒரு பட்டாசுத் தொழிலாளி குடும்பம் பிழைக்க உங்களாலான சிறு உதவி!

அந்தக் குடும்பத்தின் பிஞ்சுக் கரங்கள் – பள்ளி, கல்லூரி என்று கல்விப் படிக்கட்டில் ஏறி – நாளை கந்தகக் கிடங்கில் வாழ்நாள் எல்லாம் அடைபட்டு உழைத்த தனது தகப்பனையும் தாயையும் – அவர்கள் உழைத்த உழைப்புக்கு ஓய்வு கொடுத்து- தனது கல்வியால் நிமிரப் போகும் எத்தனையோ குடும்பங்களுக்கு நீங்கள் தரும் சிறு காணிக்கை!

அந்தப் பட்டாசுத் தொழிலாளரின் வாழ்வாதாரத்துக்கு உங்களால் ஆன சிறு உதவி! அந்த உழைப்பாளி மக்கள் உங்களிடம் கேட்பது பிச்சை அல்ல – அப்படி மானமுள்ள அந்த உழைப்பாளி மக்கள் கேட்கவும் மாட்டார்கள்!

அவர்கள் கேட்பதெல்லாம் ஆண்டு முழுதும் அவர்கள் உழைத்த உழைப்புக்கு – இன்று ஒருநாள் அங்கீகாரம்! மருந்தைப் பொதிந்து திரியைப் பதித்த அவர்களின் முகங்கள் – அந்தத் திரியை நீங்கள் பொசுக்கிக் கருக்குவதாலேயே மலரும்!

காசைக் கரியாக்காமல் நல்ல புஸ்தகம் வாங்கலாமே?- இன்று பார்த்து அறிவுரை வழங்குபவனின் முக விலாசத்தை ஆராயுங்கள்!

“இடது சாரி”- அறிவு ஜீவியாக இருப்பான்! இந்துப் பெயரை வைத்துக் கொண்டு வேறு மதத்தில் புழங்கும் ‘கிறிப்டோ’ ஆக இருப்பான்! இந்து மதப் பழக்கங்களை மட்டும் பழிக்கும் – “திராவிடியப்”- பகுத்தறிவு மகனாக இருப்பான்!

“சுற்றுச் சூழல்”-மாசு படுகிறதே என்று அங்கலாய்ப்பவன் – கிரிக்கெட் மேட்சில் பாகிஸ்தான் வென்றதற்குப் பட்டாசு வெடித்துக் கொண்டாடியவனாக இருப்பான்!

புத்தாண்டு பிறக்கையில் நள்ளிரவு 12 மணிக்கு – தசம பாகம் செலுத்திவிட்டு தௌசன்ட் வாலா சரவெடி வெடிப்பவனாக இருப்பான்! எல்லா மடக்கு ஊதி – பிகில் – வாசிப்பவர்களுக்கும் தீபாவளி என்றால் மட்டும்… காசைக் கரியாகாக்கும் ஞானம் – அதற்கு பதிலாகப் புத்தகம் வாங்கும் உபதேசம்… சுற்றுச் சூழல் கவலை – எல்லாம் கணக்காகக் கச்சிதமாக இந்துக்கள் கொண்டாடும் தீபாவளியின் போதே வரும்!

புத்தகம் வாங்க வேண்டுமா? இருக்கவே இருக்கிறது – மார்கழி மாதம் பிறந்தால் ஊருக்கு ஊர் பல திருமண மண்டபங்களில் – புத்தகக் கண்காட்சிகள்தான்! அப்போது நாம் விரும்பிய புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம்!

ஏதோ மற்ற மாதங்களில் – நாள்களில் தமிழகம் முழுக்கக் கோடிக் கணக்கான புத்தகங்கள் விற்றுத் தீர்ந்து – தமிழகம் முழுவதும் ‘அறிவுஜீவி’ வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது போலவும்… தீபாவளியின் போது மட்டும்தான் ஏதோ “காசு கரியாவதற்கு” பதிலாக – “புத்தகம் வாங்கலாமே?”- என்பதும் ஒருவகை ‘ஜோல்னாப்பை அறிவுஜீவி’ மாய்மாலம்!

எனவே இந்துக்களே… தின்பண்டமும், புத்தாடைகளும் வெவ்வேறு திருவிழாக்களுக்கும் வரும்! அவற்றோடு சேர்ந்து பட்டாசுகளும், மத்தாப்புகளும் வருவது தீபாவளிக்கு மட்டும்தான்!

அவரவர் சக்திக்கு ஏற்ப – மூன்றையும் உங்கள் மனம் மகிழும் வகையில் – வாங்கிக் கொண்டாடுங்கள்! பட்டாசுகள் மத்தாப்புக்கள் வாங்குவதும் வெடிப்பதும் உங்கள் உரிமை!

இவற்றிலிருந்து உங்களை அப்புறப்படுத்தி… சிவகாசியின் உள்ளூர்த் தொழிலை நாசம் செய்வதையும், பல ஆயிரம் பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முடக்குவதையும்… உள்நோக்கமாகக் கொண்ட எந்தக் கருத்துத் திரிப்புப் பிரச்சாரத்துக்கும் மயங்காதீர்கள் தமிழர்களே!

மகிழ்ச்சியான தீபாவளி – பாதுகாப்பான தீபாவளி – மங்கலமான தீபாவளி… (இந்துக்கள்) “எல்லோரும் கொண்டாடுவோம்!”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version