More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    Homeஅடடே... அப்படியா?என்னங்க சார் உங்க சட்டம்!
    spot_img

    சினிமா...

    Featured Articles

    To Read in Indian languages…

    என்னங்க சார் உங்க சட்டம்!

    ennangasir unga sattam

    புதுமுக இயக்குனர் பிரபு  ஜெயராம் உண்மையிலேயே இது வரை தமிழ் சினிமாவில் வராத அல்லது தொடவே தயங்குகிற ஒரு கதையை படமாக்கியிருக்கியிருப்பதே என்னங்க சார் உங்க சட்டம் . இந்த படம் டூப்ளக்ஸ் வகையறா அதாவது முதல் பாதி ஒரு படம் இரண்டாவது பாதி வேறு படம் இரண்டும் க்ளைமேக்ஸில் இணையும் …

    அப்பாவின் சாதி வெறி பிடிக்காமல் எல்லா சாதி , மதத்திலும் பெண்களை காதல் பண்ணும் வழக்கமான தமிழ் சினிமாவின் லட்சிய ஹீரோவின் அட்டக்கத்தி ஜாலி  பயணம் முதல் பாதி ‌‌. ஆனால் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு சாதிய அடிப்படையில் இல்லாமல் பொருளாதார , திறமை அடிப்படையில் அனைவருக்கும்  அர்ச்சகர் , அரசாங்க வேலை இரண்டுமே கிடைக்க வேண்டுமென்கிற கருத்தை எந்த காம்ப்ரமைசும் இல்லாமல் நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி சொல்லும் சீரியஸ் பயணம் இரண்டாம் பாதி …

    ஹீரோ ஆர்.எஸ்.கார்த்திக் முதலில் அட்டக்கத்தி தினேஸை நினைவு படுத்தினாலும் போகப்போக கவர்கிறார் . எல்லா சமூக பெண்களிடமும் இவர் அடிக்கும் காதல் லூட்டி கலகல ‌‌. ரோகிணி முதல் பாதியில் அப்பாவி அம்மா , இரண்டாம் பாதியில் சீரியஸ்  பத்ரகாளி என இரண்டிலுமே ஜொலிக்கிறார் . ஜுனியர் பாலையா தேர்ந்த நடிப்பில் தானொரு சீனியர் என நிரூபிக்கிறார் .‌‌‌‌‌ பாடல்கள் , பின்னணி இசை இரண்டுமே பலம் …

    ennangasir unga sattam1

    இரண்டு படங்களை கோர்க்கும் ஐடியா நன்றாக இருந்தாலும் ஜென்டில்மேன் போல சீரியஸ் படத்தை கமர்சியல் எலிமெண்ட்ஸோடு ஒரே படமாக எடுத்திருந்தால் இன்னும் சுவாரசியமாக படத்தோடு ஒன்ற முடிந்திருக்கும் . முதல் பாதி சம்பவங்கள் நன்றாக இருந்தாலும் சம்பவமாகவே தொடர்வது பொறுமையை சோதிக்கிறது . சில குறைகளை தவிர்த்து பார்த்தால் இட ஒதுக்கீடு , அர்ச்சகர் நியமனம் உட்பட சீரியஸ் சப்ஜெக்டை தொட்ட தைரியம் , ” எல்லோரும் என்ன ஏன் சாமின்னு ஒதுக்குறா? நான் மட்டும் ஏன் மாஞ்சு மாஞ்சு படிக்கணும் ? யாரோ பண்ண தப்புக்கு நான் எப்படி பொறுப்பாவேன் ? எல்லா சாதியிலும் மலம் அள்ள துடிக்குறாளா ? என்பது போன்று ஐயர் பையன் கேட்கும்  சாட்டையடி கேள்விகள் இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது படம் ஒரு உண்மையான சமூக நீதி …

    ரேட்டிங்க் : 3.25*

    • விமர்சனம் : அனந்து

    முழு விமர்சனமும் இந்த வீடியோவில் …

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    seventeen + 3 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Exit mobile version