― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?வளைகாப்பில் கர்ப்பிணி போட்ட டான்ஸ்! வைரல்!

வளைகாப்பில் கர்ப்பிணி போட்ட டான்ஸ்! வைரல்!

- Advertisement -
dance

இலங்கையைச் சேர்ந்த இளம்பெண் யோஹானி டி சில்வா பாடியுள்ள ‘மணிகே மாகே ஹிதே’ (Manike Mage Hithe) என்னும் சிங்கள பாடல் 140 மில்லியன் பார்வைகளைக் கடந்துச் சென்றுகொண்டிருக்கிறது.

இன்ஸ்டாகிராம் ரீல், ஃபேஸ்புக் ரீல், யூடியூப் என சமூக வலைத்தளங்கள் பலவற்றிலும் சமீப நாட்களில் நாம் அதிகம் பார்த்திருக்கும் பாடல் ‘மணிகே மாகே ஹிதே’ தான்.

பாடல் வெளியாகி சில மாதங்கள் ஆனபோதும் இன்னும் அந்தப் பாடலுக்கான மோகம் குறையவில்லை. இன்னும் பலர் ரீல் செய்வதைப் பார்க்க முடிகிறது.

தற்போது “மணிகே மகே ஹிதே” பாடலுக்கு ஒரு பெண் அஸ்ஸாமிய பிஹு நடனம் ஆடும் மற்றொரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவைப் பார்த்த பலர் பாராட்டி வருகின்றனர். புடவை அணிந்து அவர் நெளிவு சுழிவோடு ஆடுவது பலரையும் கவர்ந்திருக்கிறது.

pregnent

அதேபோல கர்ப்பிணியான இன்னொரு பெண்ணும் தனது வளைக்காப்பு விழாவில் இதே பாடலுக்கு நடனமாடுகிறார்.

‘ஃபைனல்லி..என்னுடைய ஸ்பெஷல் நாளில் இந்த ட்ரெண்டை நானும் செய்தேன். இது அம்மா மற்றும் குழந்தை இருவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. எனக்கு மருத்துவ சிக்கல்கள் எதுவும் இல்லை மற்றும் நடனம் ஆடும்போது எந்த சிக்கலும் இல்லை. ஒவ்வொரு கர்ப்பமும் வித்தியாசமானது மற்றும் எந்த வகையான உடற்பயிற்சியையும் செய்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும்’ என பதிவிட்டுள்ளார்.
இந்த 2 வீடியோக்களும் வைரல் லிஸ்ட்டில் இணைந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version